அனிதா தந்தையை தொடர்ந்து பாலாஜியின் தந்தை காலமானார் – தொடரும் பிக் பாஸ் போட்டியாளர்களின் சோகம்.

0
3002
balaji

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

பிக் பாஸ் வீட்டில் இந்த சீசனில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ் ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளராக தான் இருந்தார். அதிலும் ஒரு எபிசோடில், பாலாஜி, சனம் ஷெட்டியை அட்ஜெஸ்ட்மண்ட் என்ற வார்த்தையை குறிப்பிட்டு அவதூறாக பேசி இருந்தார் என்று சர்ச்சை எழுந்தது. அதே போல ஆரியிடம் மரியாதை குறைவாக பேசியது, மைக்கை தூக்கி போட்டு உடைத்து என்று பல சர்ச்சைகளில் சிக்கிய பாலாஜி ரெட் கார்ட் கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் பலர் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : இன்ஸ்டாகிராம் லைவில் சித்ரா பற்றி கேட்ட ரசிகர்கள் – ரம்யா பாண்டியன் உருக்கம். வீடியோ இதோ.

- Advertisement -

இருப்பினும் இவருக்கு இந்த சீசனில் இரண்டாம் இடம் கிடைத்தது.பிக் பாஸ் ஆரம்பித்த சில நாட்களில் கடந்து வந்த டாஸ்க் என்று ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்கின் போது பாலாஜி முருகதாஸ் பேசும் போது, தனது தாய், தந்தை இருவரும் குடிக்கு அடிமையானவர்கள் என்றும், குடித்துவிட்டு அப்பா தன்னை நள்ளிரவில் அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் ஒரு குழந்தையைப் பெற்று சரியாக வளர்க்க முடியாதவர்கள் ஏன் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். கடந்த ஆக்டோபர் 29 ஆம் தேதி நடைபெற்ற டாஸ்க் ஒன்றில் பாலாஜி தனது அம்மா மிகவும் அப்பாவி என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒரு நிலையில் பாலாஜியின் தந்தை உடல் நலக் குறைவால் காலமாகியுள்ளார். தந்தையின் இறுதி சடங்கில் பாலாஜி கண்ணீரோடு இருக்கும் புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், தந்தையின் இறப்பை தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாலாஜி ‘இதுவும் கடந்து போகும்’ என்று பதிவிட்டுள்ளார். சமீபத்தில் தான் அனிதாவின் தந்தை காலமாகி இருந்தார். அதே போல கடந்த ஆண்டு பிக் பாஸ் போட்டியாளர்களான முகேன் மற்றும் லாஸ்லியாவின் தந்தை காலமாகி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement