பாலாவை இதை செய்ய கமல் சாரை அனுமதிங்க – அதை டிவில போடாதீங்க. கடுப்பான விஜய் டிவி பிரபலம்.

0
2843
bala

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் கடந்த 3 சீசன்களை விட படு மோசமாக சென்று கொண்டு இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே கடந்த சீசனை விட இந்த சீசனில் பெரும்பாலும் சண்டைகள் மட்டும் தான் இருந்து வருகிறது. பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே டாஸ்க் என்றால் ஜாலியாக தான் இருக்கும் ஆனால், இந்த சீஸனில் டாஸ்க்கில் கூட சண்டை தான் வருகிறது. இருப்பினும் இந்த சீசன் கொஞ்சம் சுவாரசியமான சென்றத்துக்கும் முக்கிய காரணம் ஆரி மற்றும் பாலாஜியின் சண்டைகள் தான் என்பது மறுக்க முடியாத ஒன்று.

ஆனால், கடந்த சில தினங்களாக இவர்கள் இருவரும் பழசை எல்லாம் மறந்து ஏதோ அண்ணன் தம்பி போல மிகவும் பாசமாக பழகி வருகின்றனர். ஆனால், அவ்வப்போது ஆரியை பற்றி பாலாஜி மற்றவர்களிடம் புறம் பேசிக்கொண்டு தான் வருகிறார். ஆரம்பத்தில் ஆக்ரோஷ மனிதராக இருந்த பாலா, கடந்த சில வாரங்களாக அமைதியாக மாறிவிட்டார். ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மீண்டும் பாலா தனது பழைய ஆக்ரோஷ குணத்தை ஆரியிடம் வெளிப்படுத்தினார்.

இதையும் பாருங்க : தந்தையின் இறப்பிற்கு பின் லாஸ்லியா பதிவிட்ட முதல் புகைப்படம் – ஆறுதல் கூறும் ரசிகர்கள்.

- Advertisement -

இருவரும் சுவாரசியம் குறைவான போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் இருவரும் கண்ணாடி அறைக்குள் அனுப்பப்பட்டனர். கண்ணாடி அறைக்கு சென்ற பின்னர் இடையில் வாக்குவாதம் நிகழ, ஆரி ஒரு கட்டத்தில் பாலாஜியை சோம்பேறி என்று கூற டென்சன் ஆன பாலாஜி கத்தி கூப்பாடு போட்டார். இன்னும் ஒரு முறை என்னை சோம்பேறி என்று சொன்ன அவ்ளோ தான் நீ என்று ஆரியை எச்சரித்த பாலாஜி முருகதாஸ் கண்டபடி ஆரியை திட்டித்தீர்த்து மைக்கையும் கழட்டி உடைத்து விட்டார்.

மேலும், ஆரியை வாயா போயா என்று ஒருமையில் பேசியதோடு ஆரியை சோம்பறி என்றும் முட்டாள் என்றும் திட்டித்தார் பாலாஜி. ஆனால், நேற்றய நிகழ்ச்சியில் இதற்கு எல்லாம் சேர்த்தும் கமல், பாலாஜியை வறுத்தெடுத்துவிட்டார். ஆனால், நேற்று கமல் கேட்ட பல கேள்விகளுக்கு பாலாஜி, தெரியாது ஞாபகம் இல்லை என்று தான் சொன்னார். இப்படி ஒரு நிலையில் நேற்று கமலிடம் பாலாஜி பேசிய முறை குறித்து நடிகரும் நடன இயக்குனருமான சதிஷ் ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.

-விளம்பரம்-
Facebook

அதில், கமலிடம் பாலா பதில் சொல்லும் விதம் சுத்தமாக பிடிக்கவில்லை. பாலாவிற்கு தெரியுமா ? அவர் பேசுவது கமல் சாரிடம் என்று. பாலா உண்மையில் இந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் தகுதியானவர் இல்லை. விஜய் டிவி, தயவு செய்து பாலாவை லெப்ட் ரைட் வாங்க கமல் சாரை அனுமதியங்க. அதை டிவியில் ஒளிபரப்பாதீங்க என்று பதிவிடுள்ளார் சதிஷ். மேலும், பாலாவுக்கு ஆரிய பாக்கும்போது காண்டாகுதா,பார்வையாளர்களையும் இதே கேள்விய கேளுங்க பாலா அதுக்கு உங்களுக்கு விடை தெரியும் என்றும் பதிவிட்டுள்ளார்.

Advertisement