உச்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 57 நாட்களை கடந்து இருக்கிறது. வாரங்கள் செல்ல செல்ல போட்டியாளர்களுக்கு மிகவும் சுவாரசியமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் முழுக்க சிறப்பாக செயல்பட்ட 3 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அதில் ஜித்தன் ரமேஷ் ரம்யா பாலாஜி ஆகிய மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் இந்த மூவருக்குமான கேப்டன் பதவிக்கான டாஸ்க் ஒன்று நேற்று நடைபெற்று இருந்தது.
இந்த டாஸ்கின் கார்டன் ஏரியாவில் வலை ஒன்று அமைக்கப்பட்டு அதன் மேலே அவரவருக்கு கொடுக்கப்பட்ட கலர் பிளாக் போடப்பட்டு இருந்தது. அதை ஒவ்வொரு போட்டியாளரும் குத்தி வெளியில் தள்ள வேண்டும். இதில் கீழே இருக்கும் கட்டத்திற்கு வெளியே செல்லும் பிளாக்குகளை போட்டிகள் எடுக்கக்கூடாது. அதேபோல மற்ற போட்டியாளர்களை வெளியில் விட வைத்தால் அதற்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த டாஸ்கின் இறுதியில் ஜித்தன் ரமேஷ் வெற்றி பெற்று இந்த வார தலைவரானார்.
இப்படி ஒரு நிலையில் இந்த டாஸ்க் முடிந்த பின்னர் ஆரி, பொய் சொல்கிறார் என்று புலம்பி இருந்தார் பாலாஜி. அதற்கு முக்கிய காரணம். இந்த டாஸ்கின் போது பாலாஜி, ரமேஷ் மற்றும் ரம்யாவின் பிளாக்கை கூட தட்டி விட்டார் என்று விவாதம் ஏற்பட்டது. ஆனால், இதனை பாலா ஒப்புக்கொள்ளவில்லை. மேலும், நான் என்னுடைய பிளாக்கை மட்டும் தான் தட்டினேன் என்றும் மற்ற இரண்டு எப்படி விழுந்தது என்று தனுக்கு தெரியாது என்றும் கூறியிருந்தார். ஆனால், ஆரி, ரியோ, சோம் என்று பலரும் பாலா மற்றவர்களின் பிளாக்குகளை வெளியில் தட்டினார் என்று உறுதியாக கூறினார்கள்.
இருப்பினும் யார் சொன்னதையும் ஒப்புக்கொள்ளாத பாலா,இது மிகவும் நேர்மையற்ற விளையாட்டாக இருக்கிறது. நான் என்னுடைய ஒரே ஒரு பச்சை நிற பிளாக்கை மட்டும் தான் வெளியில் தட்டி விட்டேன் என்று கூறினார். ஆனால், இந்த வீடீயோவை பார்த்தால் பாலா தட்டியதால் அவரது பச்சை நிற பிளாக் மட்டுமல்லாமல் ரமேஷ் மற்றும் ரம்யாவின் பிளாக் கூட வெளியில் வந்து விழுகிறது. அதே போல பாலா, கட்டத்தை விட்டு வெளியில் வந்து விழுந்த தன்னுடைய ஒரு பிளாக்கை கூடைக்குள் எடுத்து போட்டுள்ளார்.