தவறை உணர்ந்து கேப்டன் பதவியை விட்டுக்கொடுத்த பாலா – நேர்மையா ? ட்ராமாவா ? இந்த வீடியோவை பாருங்க.

0
723
bala
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான தலைவர் பதவிக்கான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. இதில் கடந்த வாரம் சிறப்பாக செயல்பட்ட போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாலா, நிஷா, ரம்யா ஆகிய 3 பேர் கலந்து கொண்டனர். இந்த டாஸ்கில் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களது முகங்கள் பொருந்திய பிளாக்குகளை சரியான உருவுதில் அடுக்கி முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த டாஸ்கில் பாலா முதலில் பிளாக்குகளை அடுக்கி வெற்றி பெற்று அடுத்த வார தலைவர் என்று அறிவிக்கப்பட்டார்.

-விளம்பரம்-

இந்த டாஸ்க் முடிந்த பின்னர் பாலாஜியை எல்லாரும் கேப்டன் என்று அறிவித்த போது, அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் பாலா, தான் இந்த டாஸ்கில் ஒரு தவறு செய்து விட்டேன் அதை யாரும் கவனிக்கவில்லை. நான் ஒரு பிளாக்கை மாற்றி வைத்துவிட்டேன். அதை நான் அப்போது கவனிக்கவில்லை.உண்மையில் இந்த டாஸ்கில் ஜெயித்தது ரம்யா தான், என்று கூறி இருந்தார். இதனால் ரம்யா இந்த வார கேப்டானாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் நேர்மையாக உண்மையை சொன்னதற்காக பாலாவை பலரும் பாராட்டி தோளில் தூக்கி கொண்டாடினர்.

இதையும் பாருங்க : கையில் துப்பாக்கியுடன் எருமை மீது யாஷிகா – சர்ச்சைக்கு உள்ளான புகைப்படம்.

- Advertisement -

அதே போல ரசிகர்களும் பாலாவை பாராட்டி வந்தனர். ஆனால், இப்படி செய்தது பாலாவாச்செ சந்தேகம் வராமலா இருக்கும். இதனால் பாலாவிற்கு ஒரு சிறு விளக்கப்படம் ஒன்றை உருவாக்கி பாலா உண்மையில் விட்டுக்கொடுக்கவில்லை என்று நெட்டிசன்கள் பலர் கூறி வருகின்றனர். அதாவது உண்மையில் பாலா, அணைத்து பிளாக்குகளையும் அடுக்கி முடித்து பார்த்த போதே அவர் இரண்டு பிளாக்கை மாற்றி வைத்திருப்பதை கவனித்து விட்டார் என்றும், ஆனால் அந்த தருணத்தில் ரம்யா தனது பிளாக்கை அடுக்கி முடிக்கும் தருவாயில் இருந்ததால் அதனை மறைத்து தனது டாஸ்கை முடித்துவிட்டதாக பாலா கூறி விட்டார் என்றும் அந்த வீடியோ இருக்கிறது.

ஆனால், அப்போதே பாலா ஏன் சொல்லவில்லை ? இந்த டாஸ்க் முடிந்து நீங்கள் தான் இந்த பிக் பாஸ் வீட்டின் அடுத்த வார தலைவர் என்று பிக் பாஸ் அறிவித்த போது கூட , நன்றி பிக் பாஸ் இறுதியாக நான் கேப்டன் ஆகி விட்டேன் என்று கூறி மகிழ்ந்தார் பாலா. ஆனால், தான் செய்த தவறு என்று அப்போது தெரிந்திருந்தால் உண்மையில் அப்போதே தான் செய்த தவறை சொல்லி இருக்கலாம். மேலும், கடந்த வாரம் நடைபெற்ற கேப்டன் பதவிக்கான டாஸ்க்கின் போதே பாலா செய்த தவறை ஒப்புக்கொள்ளாமல் வாக்கு வாதம் செய்தார். இதனால் கடந்த வாரம் குறும்படம் கூட போடப்பட்டு இருந்தது. எனவே, எங்கே இந்த தவறை மறைத்தால் இந்த வாரமும் ஒரு குறும்படம் வந்துவிடுமோ என்றும் பாலா யோசித்தரோ என்னவோ என்பது அவருக்கே வெளிச்சம். எது எப்படியோ, பாலா காலம் தாழ்த்தி சொன்னாலும் நேற்று உண்மையை சொன்னதற்கு பாராட்ட தான் வேண்டும்.

-விளம்பரம்-
Advertisement