சனம் ஷெட்டியின் புகார் கடிதம், ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறாரா பாலாஜி ? வைட்டிங் லிஸ்டில் மூன்றாம் வைல்ட் கார்டு.

0
9824
bala
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முதல் பாலாஜி மற்றும் சனம் ஷெட்டி விவகாரம் தான் வைரலாக பேசப்பட்டு வருகிறது. கடந்த 10ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி மற்றும் பாலாஜி முருகதாஸ் பேசிக்கொண்டிருக்கையில் பாலாஜி முருகதாஸ் நான் ஒரு மிஸ்டர் அண்ட் மிஸஸ் சவுத் இந்தியா என்ற பெயரில் pageant ஒன்றை நடத்தினேன் என்று கூறினார் அதற்கு சனம் செட்டி எப்போது என்று கேட்டதற்கு பாலாஜி முருகதாஸ் இது உங்களுடையது மாதிரி டுபாக்கூர் கிடையாது என்று கூறினார். உங்களுடைய நிகழ்ச்சிகளில் எல்லாம் யாரும் இன்டர்நேஷனல் லெவலுக்கு செல்ல முடியாது என்று பாலாஜி முருகதாஸ் கூறினார். அப்போது ஆரம்பித்தது பாலாஜி மற்றும் சனம் ஷெட்டிக்கு இடையிலான பிரச்சனை.

-விளம்பரம்-

கடந்த இரண்டு தினங்க்ளுக்கு முன்னர் நிகழ்ச்சியில் சனம் மற்றும் பாலாஜிக்கு ஒரு மிகப் பெரிய சண்டை வெடித்தது. போட்டியாளர்கள் அனைவரும் வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது பாலாஜி, சனம் ஷெட்டியை தருதலை என்றால் என்ன தெரியுமா என்று கேட்டார். அதற்கு சனம் ஷெட்டி தெரியாது என்று சொல்ல அது நீதான் என்று கூறியிருந்தார் பாலாஜி. இதனால் அங்கிருந்து சனம் ஷெட்டி கோபமாக எழுந்து வந்து விட்டாலர். அதன்பின்னர் சிறிது நேரம் கழித்து பாலாஜியிடம் ஏன் என்னை தறுதலை என்று கூறினாய் என்று சண்டையிட்டார் சனம் ஷெட்டி.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நேற்றய நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகி இருந்தது. போட்டியாளர்கள் அனைவரும் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் யாரிடம் பிரச்சனை இருக்கிறதோ அதனை புகாராக எழுத வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்து இருந்தார்.பாலாஜி மற்றும் சனம் ஆகி இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டி புகார்களை எழுதினர். ஆனால், அந்த ப்ரோமோவை நீக்கியது விஜய் டிவி. என்ன காரணம் என்று பார்த்தால், சனம் ஷெட்டி, பாலாஜிக்கு எதிராக எழுதிய புகார் தான்.

This image has an empty alt attribute; its file name is 1-15-853x1024.jpg

சனம் ஷெட்டி எழுதிய கடிதத்தில் பாலாஜி,நான் டைட்டில் வின்னராக இருக்கும் பியூட்டி பேஜன்டுக்கு எதிராக அட்ஜஸ்ட்டமென்ட் மற்றும் காம்ப்ரமைஸ் என்ற வார்த்தையை பயன்டுத்தியதாகவும். யாரோ ஒரு மூன்றாம் நபர் சொன்ன ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்னுடைய நேர்மைக்கு களங்கம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயம் வெளியானால் கண்டிப்பாக சமந்தபட்ட அந்த பியூட்டி பேஜன்ட் நிறுவனமும் அதில் பங்குபெற்ற அணைத்து பெண் போட்டியாளர்களும் பாலாஜிக்கு எதிராக குற்றம் சாட்ட வாய்ப்பு இருக்கிறது. எனவே, இதனை பெரிதாக்க விரும்பாமல் ப்ரோமோவையே நீக்கியது விஜய் டிவி.

-விளம்பரம்-
sanam

அதே போல நேற்றய நிகழ்ச்சியில் சனம் பாலாஜிக்கு எதிராக புகார் எழுதிக் கொண்டிருக்கும்போது கூடுதலாக 2 பேப்பரை வாங்கி புகார் எழுதி இருந்தார். அந்த அளவிற்கு பாலாஜி மீது புகார்கள் குவிந்தன. இதனிடையே இந்த டாஸ்க் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சமூக வலைதளத்தில் பாலாஜிக்கு எதிரான புகார் குவிந்து வருவதால், அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நீக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாலாஜியின் வெளியேற்றத்தை ஈடு செய்ய இம்முறை மூன்றாம் வைல்டு கார்டு போட்டியாளரை வைட்டிங் லிஸ்டில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அது பகல் நிலவு சீரியலில் நடித்த நடிகர் அஸீம் என்றும் கூறப்படுகிறது.

Advertisement