இவர் தான் பிக் பாஸ் எடிட்டராம் – அவரு பாலாஜி கிட்ட என்ன சொல்லி இருக்கார்னு நீங்களே பாருங்களேன்.

0
55986
balaji

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

பிக் பாஸ் வீட்டில் இந்த சீசனில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ் ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளராக தான் இருந்தார். அதிலும் ஒரு எபிசோடில், பாலாஜி, சனம் ஷெட்டியை அட்ஜெஸ்ட்மண்ட் என்ற வார்த்தையை குறிப்பிட்டு அவதூறாக பேசி இருந்தார் என்று சர்ச்சை எழுந்தது. அதே போல ஆரியிடம் மரியாதை குறைவாக பேசியது, மைக்கை தூக்கி போட்டு உடைத்து என்று பல சர்ச்சைகளில் சிக்கிய பாலாஜி ரெட் கார்ட் கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் பலர் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இருப்பினும் இவருக்கு இந்த சீசனில் இரண்டாம் இடம் கிடைத்தது. அதே போல இந்த சீசன் சுவாரசியமாக சென்றதற்கு பாலாஜியும் ஒரு முக்கிய காரணம் என்று தான் சொல்ல வேண்டும். இப்படி ஒரு நிலையில் பாலாஜி, பிக் பாஸ் நிகழ்ச்சியின் எடிட்டரோடு இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ராசா, எங்களுக்கு கனடன்ட் கொடுத்த தெய்வமே, பி பிய தூக்கி நிறுத்தின சிங்கமே. நீ இல்லேன்னா நான் இல்ல என்று குறிப்பிட பட்டுள்ளது. அதை பகிர்ந்துள்ள பாலாஜி ‘நான் அவங்க வேலையை ஈஸியா ஆக்கிட்டன்னு சொன்னாரு ‘ என்று பதிவிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்து வரை எடிட்டர்களுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. சாதாரண சம்பவத்தை கூட BGM போட்டு வேற லெவலில் மாற்றி விடுவார்கள். அதிலும் ஒரு சில பிக் பாஸ் ப்ரோமோக்களில் எடிட்டர் போடும் BGM-மை பார்த்து எதோ மிகப்பெரிய சம்பவம் இருக்கிறது என்று பார்த்தால், உண்மையான எபிசோடில் சப்பென்று ஆகி விடும், அதே போல தான் இந்த சீசனில் பல முறை பாலாஜிக்கு ஷிவானிக்கும் நடந்த சாதாரண விஷயத்தை ப்ரோமோவில் காதல் BGM போட்டு ரசிகர்களை உசுப்பேத்தியும் விட்டுள்ளார்கள்.

-விளம்பரம்-
Advertisement