பாலாஜிய வெளிய அனுப்புங்க, இல்லனா இந்த நிகழ்ச்சிக்கு ‘A’ certificate கொடுங்க – ஜேம்ஸ் வசந்தன் போட்ட நீளமான பதிவு.

0
61951
james
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 13 வாரத்தை நிறைவு செய்ய இருக்கிறது. இதுவரை இந்த சீசனில் 10 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் இன்னும் 8 பேர் உள்ளே இருக்கின்றனர். இன்னும் ஒரு இரண்டு வாரத்தில் இந்த சீசனே நிறைவடைய இருக்கும் நிலையில் இந்த சீசனில் வெற்றிய பெற போட்டியாளர்கள் கடுமையாக முயற்சித்து வருகின்றனர். அதிலும் பாலா தான் வெற்றி பெறுவதை விட ஆரி வெற்றி பெற கூடாது என்பதில் உறுதியாக இருந்து வருகிறார்.இந்த சீசன் கொஞ்சம் சுவாரசியமான சென்றத்துக்கும் முக்கிய காரணம் ஆரி மற்றும் பாலாஜியின் சண்டைகள் தான் என்பது மறுக்க முடியாத ஒன்று.

-விளம்பரம்-

அவர் அதற்கான காரணங்களை சொல்லும்போதே பாலாஜி இடையில் பேச, அங்கேயே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு விட்டது. பின்னர் இருவரும் சுவாரசியம் குறைவான போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் இருவரும் கண்ணாடி அறைக்குள் அனுப்பப்பட்டனர். கண்ணாடி அறைக்கு சென்ற பின்னர் இடையில் வாக்குவாதம் நிகழ, ஆரி ஒரு கட்டத்தில் பாலாஜியை சோம்பேறி என்று கூற டென்சன் ஆன பாலாஜி கத்தி கூப்பாடு போட்டார். இன்னும் ஒரு முறை என்னை சோம்பேறி என்று சொன்ன அவ்ளோ தான் நீ என்று ஆரியை எச்சரித்த பாலாஜி முருகதாஸ் கண்டபடி ஆரியை திட்டித்தீர்த்து மைக்கையும் கழட்டி உடைத்து விட்டார் பாலா.

இதையும் பாருங்க : இந்த வாரம் வெளியேறியது இவர் தானா ? ஆனால், நீங்க எதிர்பார்த்தது இல்லை.

- Advertisement -

பாலாவின் இந்த செயலை பலரும் கண்டித்து வருவதோடு பாலாவிற்கு ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் என்று கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் நேற்று நடைபெற்ற பாலா – ஆரி சண்டை குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளதாவது, கமல்ஹாசன் Bigg Boss நிகழ்ச்சியை அடிக்கடி இது பல்வேறு வயதினரும் பார்க்கிற ஷோ என்கிறார். அது உண்மை என்றால், பாலாஜி வெளியே அனுப்பப்பட வேண்டும். அல்லது இந்த நிகழ்ச்சிக்கு ‘A’ certificate கொடுத்து, ‘வயது வந்தவர்களுக்கு மட்டும்’ என்று தெளிவாக நிர்ணயம் செய்யவேண்டும் .

இந்த நிகழ்ச்சியை முழுக்க வார்த்தை ஒன்றுதான் இருக்கிறது முந்தைய சீசன்களில் கூட கத்துவது சத்தம் போடுவது என்று இருந்தது ஆனால் ஜனவரி 1ஆம் தேதி ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி அனைத்து எல்லைகளையும் மீறி விட்டது.நேற்று பார்த்தது கற்காலத்தில் குகையில் வாழ்ந்த மனிதர் போட்ட சண்டை போல இருந்தது இது ஏதோ காட்டுவாசி போல இருந்தது இது போன்ற நிகழ்வுகள் கண்டிப்பாக அறிவாற்றல் சிதைவுகளை ஏற்படுத்தும்.எத்தனை பொறுப்பற்ற குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை இந்த உளவியல் போரைப் பார்க்க அனுமதிக்கின்றன என்பது எனக்குத் தெரியாது, இது அவர்களின் தனிப்பட்ட பாதிப்பு காரணிகளைக் குழப்பியிருக்கும்.

-விளம்பரம்-

Advertisement