மீண்டும் பிக் பாஸில் பிந்து மாதவி – பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் முன் அவர் வெளியிட்ட வீடியோ இதோ.

0
374
bindhu
- Advertisement -

‘கல்யாணி’ டீச்சர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிந்து மாதவி. தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக பிந்து மாதவி திகழ்ந்து கொண்டு இருக்கிறார். ஆந்திரப் பிரதேசத்திலுள்ள மதனப்பள்ளியில் பிறந்தவர் பிந்து மாதவி. இவர் தமிழில் பொக்கிஷம் என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானவர். இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு தமிழை விட தெலுங்கில் தான் மார்க்கெட் அதிகம் என்று சொல்லலாம். இவர் தமிழில் வெப்பம், கழுகு, சட்டம் ஒரு இருட்டறை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஜாக்சன் துறை, பசங்க-2 போன்ற பல படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

ஜாக்சன் துறை படத்திற்கு பிறகு நடிகை பிந்து மாதவிக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் இவர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் சுற்று மூலம் உள்ளே நுழைந்தார். இதன் மூலமாக இவர் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இருந்தும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவியும் என்று பார்த்தால் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. இவர் நடிப்பில் வெளியான ‘கழுகு 2 ‘ திரைப்படமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி:

தற்போது இவர் சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பிந்து மாதவி தெலுங்கில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நான் ஸ்டாப் என்ற நிகழ்ச்சிக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகும் மிகப்பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இது தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி முதலில் ஹிந்தியில் தான் ஒளிபரப்பப்பட்டது. அதனை தொடர்ந்து பல மொழிகளில் ஒளிபரப்பி வருகிறார்கள்.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி :

அதிலும் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியை இந்தியில் தான் முதன் முதலாக Ottயில் ஒளிபரப்பானது. தற்போது இதே கான்சப்டில் இந்த நிகழ்ச்சியை தமிழிலும் தொடங்கி இருக்கிறார்கள். தமிழில் இந்த நிகழ்ச்சி டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி மணி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

-விளம்பரம்-

பிக்பாஸ் non-stop நிகழ்ச்சி:

நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே போட்டியாளர்களுக்குள் வன்மம் கலவரம் தொடங்கி பயங்கரமாக ஒருவரை ஒருவர் தாக்கி விளையாடி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சி தற்போது நான்காம் வாரத்தை நெருங்கி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது இதே கான்செப்டில் தெலுங்கிலும் ஒளிபரப்ப இருக்கிறார்கள். அதற்கு பிக்பாஸ் non-stop என்ற பெயர் வைத்து உள்ளார்கள். இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் non-stop நிகழ்ச்சியில் பிந்து மாதவி கலந்து கொள்ள இருக்கிறார்.

பிந்து மாதவி பதிவிட்ட வீடியோ:

இதற்கான அறிவிப்பையும் தற்போது அவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, நான் பிக்பாஸ் non-stop நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறேன். எப்போதும் நீங்கள் கொடுக்கும் ஆதரவை பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போதும் எனக்கு கொடுங்கள். பிக் பாஸ் வீட்டுக்குள் சந்திக்கலாம் என்று சொல்லி இருக்கிறார். இப்படி இவர் பேசியிருக்கும் விடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement