அட , கொடுமையே தனிமைப்படுத்திக்கொண்ட பிந்து மாதவி. காரணம் இதுதான். அவரே வெளியிட்ட வீடியோ.

0
1299
Bindhumadhvi
- Advertisement -

ஒட்டு மொத்த உலகையே உலுக்கி கொண்டு இருக்கும் ஒரே ஒரு விஷயம் இந்த கொரோனா வைரஸ் தான். இந்த கொரோனா வைரஸினால் நாளுக்கு நாள் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

-விளம்பரம்-

தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்ந்துள்ளது. இதில் 86, 984 பேர் நலமடைந்து வீடு திரும்பி உள்ளனர் மற்றும் 5,164 பேர் மரணமடைந்துள்ளனர். இந்தியா நாட்டிலேயே அதிகமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் நடிகை பிந்து மாதவி தன்னை தனிமைபடுத்திகொண்டு உள்ளார்.

- Advertisement -

‘கல்யாணி’ டீச்சர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை பிந்து மாதவி. தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் பிந்து மாதவியும் ஒருவர். ஆந்திரப் பிரதேசத்திலுள்ள மதனப்பள்ளியில் பிறந்தவர் பிந்து மாதவி. இவர் தமிழில் பொக்கிஷம் என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானவர். இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு தமிழை விட தெலுங்கில் தான் மார்க்கெட் அதிகம் என்று சொல்லலாம்.

இந்நிலையில் பிந்து மாதவி வசிக்கும் அப்பார்ட்மெண்டில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அதனால் 14 நாட்கள் தனிமைப்பட்டிருப்பதாகவும் தனது சமூகவலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பிந்து மாதவி. அந்த வீடியோவில் மாநகராட்சி ஊழியர்கள் அந்தக் குடியிருப்பின் கேட்டை இழுத்து மூடி, போஸ்டர் ஒட்டும் காட்சி இடம்பெற்றுள்ளது.

-விளம்பரம்-
Advertisement