இதனால் தான் அவள் மாறிவிட்டால்.! லாஸ்லியா குறித்து உண்மையை சொன்ன சேரன்.!

0
7386
CHeran

பிக் பாஸ் வீட்டில் தற்போது ஆண்கள் அணி பெண்கள் அணி என்று இரண்டு குழுவாக பிரிந்து ஏகப்பட்ட பிரச்சனை ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் லாஸ்லியா ஆண்கள் பக்கம் நின்றுகொண்டு இருக்க, இத்தனை நாள் லாஸ்லியாவை மகள் போல பார்த்துக்கொண்டு இருந்த சேரன் ஆண்கள் அணிக்கு எதிராக இருக்கும் மதுமிதா பக்கம் இருந்து வருகிறார்.

நேற்றய நிகழ்ச்சியில் மதுமிதாவிற்கும் ஆண்கள் அணிக்கும் பிரச்சனை முற்றி வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது சேரன் மதுமிதா பக்கம் நின்று பேசிக்கொண்டு இருந்தார். அப்போது வனிதா வந்த பிறகு தானே நீங்களும் இந்த விஷயம் பற்றியெல்லாம் பேசுறீங்க வனிதா வராததற்கு முன்பு யாரும் பேசவில்லை என்று லாஸ்லியா கூற , சேரன் நான் கேட்கவில்லையா என்று கேட்க நீங்களும் கேட்கவில்லை என்று கூறினார்.

இதையும் பாருங்க : கேப்டன் போட்டியில் பித்தலாட்டம் செய்த மது.! விடியோவை பாருங்க உங்களுக்கே புரியும்.! 

- Advertisement -

இதனால் கடுப்பான சேரன், நான் கேட்கவில்லையா, நான் தான் கவினை முதலாக கேள்வி கேட்டேன் என்று லாஸ்லியாவை கத்த துவங்குவதும் லாஸ்லியா நான் உங்களை சொல்லவில்லை மதுவை தான் சொன்னேன் என்று மீண்டும் மதுவிடம் சண்டை போட துவங்கிவிட்டார். இந்த சம்பவத்தால் சேரன் மிகவும் மனமுடைந்து போனார்.

-விளம்பரம்-

இந்த சம்பவத்திற்கு பின்னர், ஷெரினிடம் பேசிக்கொண்டு இருந்த சேரன், எனக்கு மகள்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் தான் மகள் என்ற கரிசனம் வந்தவுடன் நான் அவளை அப்படி பார்த்துக்கொண்டேன். முன்பெல்லாம் நான் இல்லாமல் சாப்பிட மாட்டால். ஆனால், இப்போதெல்லாம் நான் அழைத்தாலும் அவள் வருவது இல்லை.

ஆனால், திடீரென்று மாறிவிட்டால். இப்போது அவர்கள் செய்வது தான் சரி என்று நினைக்கிறாள். அதுவும் கவினை நாமினேட் செய்ததால் தான் அவள் மாறிவிட்டால் என்று புலம்பினார் சேரன்.

கடந்த சில நாட்களாகவே சேரனை லாஸ்லியா கண்டு கொள்வதே இல்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது. ஆனால், நேற்றய நிகழ்ச்சியில் சேரனே அதனை கூறி விட்டார். லாஸ்லியாவை மகளாக பார்த்து வந்த சேரனுக்கு லாஸ்லியா செய்த இந்த செயலை என்னவென்று சொல்வது.

Advertisement