பிக் பாஸில் இருந்து வெளியேற்றபட்ட தர்ஷன்.! சேரன் போட்ட மிக உருக்கமான பதிவு.!

0
29274
cheran-tharshan
- Advertisement -

பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தர்ஷன் வெளியேறி இருப்பதுதான் பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் கடந்த வாரம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்த முகெனை தவிர மற்ற போட்டியாளர்கள் அனைவரும் நாமினேட் ஆகி இருந்தனர் இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பிக்பாஸ் அறிவித்த 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி இருந்தார்.

-விளம்பரம்-
Tharshan

கவின் வெளியேறியதால் லாஸ்லியா சாண்டி தர்ஷன் ஷெரின் ஆகியோர் நாமினேஷனில் இடம் பெற்று இருந்தனர். இந்த வாரம் முழுவதும் மிகவும் பரபரப்பாக ஒட்டிங்கும் நடைபெற்று வந்தது. இதில் கண்டிப்பாக ஷெரின் தான் வெளியேறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத விதத்தில் தர்ஷன் வெளியேறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி மீதும் விஜய் டிவி மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர் ரசிகர்கள்.

இதையும் பாருங்க : பிக் பாஸில் இருந்து வெளியேறிய தர்ஷன்.! பார்வையாளர்களின் ரியாக்ஷனை பாருங்க.!

- Advertisement -

தர்ஷன் தான் பிக்பாஸ் டைட்டில் வின்னர் என்று சக போட்டியாளர்கள் புகழாரம் சூட்டி வந்த நிலையில் தற்போது இறுதிப் போட்டிக்கு முன்பாக தர்ஷன் எலிமினேட் ஆகியுள்ளது சக போட்டியாளரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய சேரன் வெளியேற்றும் குறித்து தனது வருத்தத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து தனது ஆகச்சிறந்த உழைப்பை கொடுத்து விளையாடிய தம்பி தர்சன் இன்று வெளியேற்றப்படுகிறார் என்றால் அது வருத்தத்திற்குரியது.. 100 சதவீதம் பிக்பாஸ் வின்னர் என்ற பட்டமும் பரிசும் பெற முழுத்தகுதியானவர். அவரின் முயற்சியும் முனைப்பும் அருகில் இருந்து பார்த்தவன் நான்.. அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

அதே போல இதுவரை வெளியேற்றப்பட்ட எந்த ஒரு போட்டியாளர்களும் ரசிகர்கள் இந்த அளவிற்கு வருத்தப்படவில்லை. இன்று தர்ஷன் வெளியேறியபோது அரங்கில் இருந்த பல பார்வையாளர்கள் கண் கலங்கி அழுதன.ர் அதேபோல இறுதிப்போட்டிக்கு செல்லவில்லை என்றாலும் நீதான் என்னை பொறுத்தவரை டைட்டில் வின்னர் என்று சாண்டி கூட தர்ஷனிடம் கூறியிருந்தார்

Advertisement