சினிமா உலகில் நுழைந்த குறுகிய நாளிலேயே தன்னுடைய எதார்த்தமான நடிப்பும், பேச்சும் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் விஜய் சேதுபதி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து உள்ள படம் மாஸ்டர். இந்த மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதனை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் யாதும் ஊரே யாவரும் கேளிர், மாமனிதன், காத்துவாக்குல ரெண்டு காதல், லாபம் போன்ற பல தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
அதோடு இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். இவரை வைத்து படம் இயக்க பல இயக்குனர்கள் காத்துக் கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் நடிகரும், இயக்குனரும் ஆன சேரன் அவர்கள் விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்க போவதாக ஏற்கனவே சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார். அவ்வளவு ஏன் சேரன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு காரணம் கூட விஜய் சேதுபதிதான் என்று சேரன் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், இத்தனை வருடங்கள் ஆகியும் இந்த படம் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சேரனிடன், இந்த படம் குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த சேரன் ‘அது இனிமேல் பண்ண முடியாது. அவரோட நிலை உயர்ந்துவிட்டது. அவருக்கான கதை மாற்றப்பட வேண்டும் மற்றும் அவர் மிகவும் பிசியாக இருக்கிறார். இன்னும் 10 வருஷத்துக்கு அவரது டேட் இல்லை. அதனால் தற்போது அந்த படம் பண்ண முடியாது ‘ என்று கூறியுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார் சேரன். தவமாய் தவமிருந்து போன்ற ஒரு படைப்பு மாதிரி தான் விஜய்சேதுபதி அவர்களுக்கு வைத்திருக்கும் படத்துக்கான திரைக்கதை. ஏனோ, செய்து முடிக்க முடியாமல் தள்ளிக்கொண்டே போகிறது. அண்ணன்களும் , தங்கைகளும் கண்ணுக்குள் வைத்து பாதுகாக்கப்போகும் படமாக அமையும். வழி விடுமா காலம் என்று ஏக்கத்துடன் கூறி இருந்தார்.
அதே போல ரசிகர் ஒருவர் ‘விஜய்சேதுபதி அவர்களே சேரன் உங்களுக்கு பொருந்துமாறு ஒரு கதையை எழுதி அதில் நீங்கள் தான் சரியாக இருப்பீர்கள் என்று உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். சிறந்த நடிகரும் சிறந்த இயக்குனரும் இணைந்தால் கண்டிப்பாக அது அனைவருக்கும் ஒரு விருந்தாக அமையும். தயவு செய்து அவரை நம்புங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். ரசிகரின் இந்த பதிவை கண்ட சேரன் பதறிப்போய் உடனடியாக அதற்கு பதில் அளித்ததார் சேரன்.
அதில், நான் இது போன்ற பதிவுகளை ஊக்குவிப்பது இல்லை. அவருக்கு என்னை பற்றி நன்றாக தெரியும். மேலும் என்னுடைய படத்தில் நடிப்பது குறித்து அவர் ஏற்கனவே திட்டமிட்டு இருக்கிறார். எனவே, ஒரு சமூக வலைதளத்தில் இதுபோன்று நிர்ப்பந்திக்க வேண்டாம். அது மிகப் பெரிய பிரச்சனைகளை உண்டாக்கும் நீங்கள் இதனை பக்குவமாக ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன் என்றுகூறி இருந்தார்.