எதிர்பாராத திருப்பம்.! காப்பற்றபட்ட ஷெரின்.! வெளியேற்றபட்ட நபர்.! இன்றைய ஹைலைட்ஸ் இது தான்.!

0
10258
bigg boss
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் நான்கு வாரமே இருக்கிறது. இந்த சீசன் டைட்டில் வின்னர் யார் என்பதற்கான சுவாரசியம் கூடி வருகிறது. இந்த வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற போகும் நிலையில் யார் வெற்றி பெறப் போவது என்ற மிகப்பெரிய கேள்வியும் எழுந்துள்ளது.

-விளம்பரம்-

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் போட்டியாளர்களுக்கு சவாலான டாஸ்க்கும் வழங்கப்படவில்லை என்று ரசிகர்கள் புலம்பி வந்த நிலையில் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே அதாவது இறுதி போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான டாஸ்க் நடைபெற்றுவந்தது. மேலும், இந்த டாஸ்க் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் முகென் அதிக புள்ளிகளை பெற்று இறுதி போட்டிக்கு நேரடியாக சென்றுள்ளார் .

இதையும் பாருங்க : புகைப்படத்தில் இருக்கும் இந்த வாரிசு நடிகர் யார் தெரிகிறதா ? இப்படி ஒரு மாற்றமா.!

- Advertisement -

இந்த வாரத்தின் நாமினேஷன் நேற்று நடைபெற்று இருந்தது. அதில் சேரன், கவின், லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ளனர். இந்த வாரம் கவினை தான் அதிகம் பேர் நாமினேட் செய்துள்ளனர். இருப்பினும் இந்த வாரம் முழுவதும் நடைபெற்று வந்த ஓட்டிங்கில் கவினுக்கும் வழக்கம் போல அதிக வாக்குகள் பதிவாகி வந்தன.

-விளம்பரம்-

நேற்றய நிகழ்ச்சியில் யார் காப்பற்றபட்டார் என்று கமல் அறிவிக்வில்லை. இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் சில ஹைலைட்ஸ் பற்றிய விவரங்கள் கசிந்துள்ளது. இன்றைய நிகழ்ச்சியில் முதல் ஆளாக ஷெரின் காப்பற்றப்பட்டுள்ளார். அவரை தொடர்ந்து கவின் மற்றும் லாஸ்லியா காப்பற்றப்பட்டுள்ளனர். மேலும், இறுதியாக சேரன் வெளியேற்றபட்டதாக கமல் அறிவித்தவுடன் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் அமைதி நிலவியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.


Advertisement