பிக் பாஸில் பார்த்த சேரனின் தாயாரா இது ? இப்படி ஒரு பிராம்மாண்ட வீட்டில் வாழ்ந்து வருகிறாரா. வைரலாகும் வீடியோ இதோ.

0
597
cheran
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்தவர் சேரன். இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், ராமன் தேடிய சீதை, யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களை இயக்கியும், நடித்தும் இருந்தார். அந்த வகையில் சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டு இருந்தது. அதுமட்டும் இல்லாமல் வசூல் சாதனை பெற்று இருந்தது. பெரும்பாலும் இவர் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்தும் வித்தியாசமாக இருப்பதால் இவருடைய படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்ப்பார்ப்பு இருக்கும். மேலும், சேரன் அவர்கள் இயக்கிய பல படங்கள் தேசிய விருதுகளை வாங்கி இருக்கிறது.

-விளம்பரம்-

பின் இடையில் சில காலம் சேரன் படம் இயக்குவதில் இருந்து விலகி இருந்தார். பிறகு இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார்.மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் சேரன் மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சேரன் இயக்கி நடித்த படம் ராஜாவுக்கு செக். இந்த படத்தில் சேரன் ஹீரோவாக நடித்து இருந்தார். இவருக்கு ஜோடியாக சராயூ மோகன் நடித்து இருந்தார் . இந்த படத்தில் நடிகர் இர்பான் வில்லனாக நடித்து இருந்தார். மேலும், இந்த படத்தை பல்லாட் கொக்காட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

- Advertisement -

சேரன் நடித்த படங்கள்:

இவர்களுடன் படத்தில் முக்கிய வேடத்தில் சிருஷ்டி டாங்கே, வர்மா ஆகியோர் நடித்து இருந்தார்கள். இந்த படம் எமோஷனல், திரில்லர், ஆக்ஷன், காமெடி என பல கலவைகளை கொண்டு இருந்தது. அதோடு இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில் சேரன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு ‘. இந்த படத்தை ஸ்ரீவாரி பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக், சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்டை சரவணன், சிங்கம்புலி, பிக்பாஸ் சினேகன் என பெரும் நட்ச்சத்திர பட்டாளமே நடித்து இருந்தார்கள்.

சேரன் பற்றிய வீடியோ:

குடும்பப் பாச கதையை மையமாக கொண்ட இந்த படம் ரசிர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது சேரன் படங்களில் பிசியாக இருக்கிறார். இந்நிலையில் சேரனின் வீடு, சொந்த ஊர் குறித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில், சேரன் அவர்கள் மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பழையூர் பட்டியை சேர்ந்தவர். சேரனின் மனைவி செல்வராணி. சேரனுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். சேரனின் பெற்றோர்கள் பாண்டியன், கமலா. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். சேரன் தான் மூத்தவர்.

-விளம்பரம்-

சேரனின் வீடு, குடும்பம்:

சேரனுக்கு பின் இரண்டு தங்கைகள். சேரனின் தாய் கமலா அரசு ஆரம்பப்பள்ளியில் ஆசிரியராக இருந்தவர். சேரனின் தந்தை பாண்டியன் சினிமா தியேட்டரில் புரஜக்டர் ஆப்பரேட்டராக பணியாற்றி இருந்தவர். சேரனின் கிராமத்து வீடு மிக அழகாக இருக்கிறது. ஊட்டி, கிழக்கு கடற்கரை சாலை போன்ற பகுதிகளில் இருக்கும் அளவிற்கு மிக அழகாக சேரன் வீடு இருக்கிறது. சொல்லப்போனால் அந்த ஊரிலேயே சேரன் வீடு தான் பிரம்மாண்டம் என்று சொல்லலாம். பின் சேரனின் அம்மா கூறியிருப்பது, என்னுடைய மூத்த மகன் சேரன்.

சேரனின் சினிமா ஆர்வம்:

சின்ன வயதில் இருந்தே அவனுக்கு சினிமாவின் மீது அதிக ஆர்வம். ஆரம்பத்தில் சேரன் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகுதான் இவரது சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. ஊர் திருவிழாக்கள், முக்கியமான விசேஷங்கள் என்றால் சேரன் ஊருக்கு வந்து செல்வார். சிறுவயதிலேயே சேரன் பட ரீல்களை வைத்து சிறு பிள்ளைகள் எல்லாம் உட்கார வைத்து வெள்ளைத் துண்டில் படம் ஓட்டி காண்பிப்பார். அப்போது இருந்தே அவருக்கும் படம் எடுப்பதில் ஆர்வம் என்று கூறி இருந்தார். தற்போது சேரின் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement