பீச் போட்டோ ஷூட் நடத்திய சேரன் ரீல் மகள் – வெள்ளை குதிரையுடன் வெள்ளை நிற ட்ரான்ஸ்பிரென்ட் உடையில் கொடுத்த போஸ்.

0
318
Nandhana
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக சேரன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் தமிழ் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் சிறந்த நடிகரும் ஆவார். ஆரம்ப காலத்தில் துணை இயக்குனராக பணியாற்றி வந்த சேரன் கே எஸ் ரவிக்குமார் உடன் பல்வேறு படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதற்கு பிறகு தான் இவர் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இவர் சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், ராமன் தேடிய சீதை, யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களை இயக்கியும், நடித்தும் உள்ளார்.

-விளம்பரம்-
nandhana varma

பெரும்பாலும் இவர் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்தும் வித்தியாசமாக இருப்பதால் இவருடைய படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்ப்பார்ப்பு இருக்கும். மேலும், சேரன் அவர்கள் இயக்கிய பல படங்களுக்காக தேசிய விருதுகளை வாங்கி உள்ளார். பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார்.

- Advertisement -

சேரனின் ராஜாவுக்கு செக்:

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சேரன் இயக்கி நடித்த படம் ராஜாவுக்கு செக். இந்த படத்தில் சேரன் ஹீரோவாக நடித்தார். இவருக்கு ஜோடியாக சராயூ மோகன் நடித்து உள்ளார். இந்த படத்தில் நடிகர் இர்பான் அவர்கள் வில்லனாக நடித்து உள்ளார். மேலும், இந்த படத்தை பல்லாட் கொக்காட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இவர்களுடன் படத்தில் முக்கிய வேடத்தில் சிருஷ்டி டாங்கே, வர்மா ஆகியோர் நடித்து உள்ளார்கள். ஜெயம் ரவியின் ‘மழை’ படத்தை இயக்கிய சாய்ராஜ் குமார் அவர்கள் தான் இந்த படத்தையும் இயக்கி உள்ளார்.

nandhana varma

சேரனுக்கு மகளாக நடித்த நந்தனா வர்மா:

இந்த படம் எமோஷனல், திரில்லர், ஆக்ஷன், காமெடி என பல கலவைகளை கொண்ட காமெடி படம் ஆகும். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும், இந்த படத்தில் சேரனுக்கு மகளாக நந்தனா வர்மா நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்திற்கு பிறகு இவருக்கு பெரிய அளவில் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்த சில படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்.

-விளம்பரம்-

நந்தனா வர்மாவின் பீச் போட்டோ:

அவ்வப்போது தன் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் நடிகை நந்தனா வர்மா சோசியல் மீடியாவில் தற்போது எடுத்த பீச் போட்டோ ஷூட் புகைப்படத்தை ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் வெள்ளை நிற ஆடையில் குதிரையைப் பிடித்துக் கொண்டிருக்கும் மாறி கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் லைக்ஸ்குகளையும், கமெண்டுகளையும் அள்ளி குவித்து வருகிறார்கள்.

ஆனந்தம் விளையாடும் வீடு:

மேலும், இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் வெளிவந்த படம் ஆனந்தம் விளையாடும் வீடு. இந்த படத்தை ஸ்ரீவாரி பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு சித்துகுமார் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் சேரன், கௌதம் கார்த்திக், சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, பிக்பாஸ் சினேகன் என பெரும் நட்ச்சத்திர பட்டாளமே நடித்து உள்ளனர். குடும்பப் பாச கதையாக உருவாகியுள்ள ஆனந்தம் விளையாடும் வீடு ரசிர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

Advertisement