அவரை நம்புங்க சார். சேரனுக்காக விஜய் சேதுபதியிடம் சிபாரிசு செய்த தொழிலதிபர். சேரன் கொடுத்த உடனடி பதில்.

0
18851
cheran

தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் சேரனும் ஒருவர். இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், ராமன் தேடிய சீதை, யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களை இயக்கியும், நடித்தும் உள்ளார். அந்த வகையில் சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. வசூல் சாதனை பெற்றது என்றும் சொல்லலாம். இந்த படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே பாடல் தேசிய விருது பெற்றது. சேரன் அவர்கள் இயக்கிய பல படங்களுக்காக தேசிய விருதுகளை வாங்கி உள்ளார்.

https://twitter.com/ChandraTanzania/status/1251014559508451329

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சேரன் அவர்கள் ராஜாவுக்கு செக் என்ற படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஹீரோவாக நடித்து உள்ளார். இந்த படத்தை சாய் ராஜ்குமார் இயக்கி இருந்தார்.இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

- Advertisement -

இறுதியாக சேரன் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திருமணம் என்ற படத்தை இயக்கி இருந்தார் அதன் பின்னர் எந்த படத்தையும் இயக்கவில்லை. இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னர் சேரன, விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு படத்தை இயக்க உள்ளார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியானது. அவ்வளவு ஏன் சேரன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு காரணம் கூட விஜய் சேதுபதிதான் என்று சேரன் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது இருந்து இந்த படம் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் ரசிகர் ஒருவர் விஜய்சேதுபதிக்கு ட்வீட் ஒன்றை செய்திருந்தார். அதில், அன்புக்குரிய விஜய்சேதுபதி அவர்களே சேரன் உங்களுக்கு பொருந்துமாறு ஒரு கதையை எழுதி அதில் நீங்கள் தான் சரியாக இருப்பீர்கள் என்று உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். சிறந்த நடிகரும் சிறந்த இயக்குனரும் இணைந்தால் கண்டிப்பாக அது அனைவருக்கும் ஒரு விருந்தாக அமையும். தயவு செய்து அவரை நம்புங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

-விளம்பரம்-

ரசிகரின் இந்த பதிவை கண்ட சேரன் பதறிப்போய் உடனடியாக அதற்கு பதில் அளித்தார். அதில், நான் இது போன்ற பதிவுகளை ஊக்குவிப்பது இல்லை. அவருக்கு என்னை பற்றி நன்றாக தெரியும். மேலும் என்னுடைய படத்தில் நடிப்பது குறித்து அவர் ஏற்கனவே திட்டமிட்டு இருக்கிறார். எனவே, ஒரு சமூக வலைதளத்தில் இதுபோன்று நிர்ப்பந்திக்க வேண்டாம். அது மிகப் பெரிய பிரச்சனைகளை உண்டாக்கும் நீங்கள் இதனை பக்குவமாக ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு அந்த நபர் பரவாயில்லை சகோதரரே நானும் ஒரு தொழிலதிபர் தான். உங்களுடைய பதிலை நான் நல்லபடியாக ஏற்றுக் கொள்கிறேன். என்னுடைய நோக்கம் நேர்மையானது தான். அது நீங்கள் இருவரும் இணைந்தால் அது கண்டிப்பாக ஒரு விருந்தாக அமையும் அதுதான் என்னுடைய நோக்கம் இருப்பினும் அது உங்களை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Advertisement