அருண் விஜய் பெயரை போட்டு சேரன் பெயரை போடா மறந்த சன் நெக்ஸ்ட் – சன் டிவிக்கு சேரன் போட்ட ட்வீட்.

0
851
cheran
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் சேரனும் ஒருவர். இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், ராமன் தேடிய சீதை, யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களை இயக்கியும், நடித்தும் உள்ளார். அந்த வகையில் சேரன் இயக்கி, நடிகர் அருண்விஜய் நடிப்பில் வெளியான பாண்டவர் பூமி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. வசூல் சாதனை பெற்றது என்றும் சொல்லலாம்.

-விளம்பரம்-

இடையில் இயக்குனர் சேரன் படம் இயக்குவதை நிறுத்தி விட்டார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சேரன் அவர்கள் ராஜாவுக்கு செக் என்ற படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஹீரோவாக நடித்து இருந்தார் . இந்த படத்தை சாய் ராஜ்குமார் இயக்கி இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் பாண்டவர் பூமி படம் வெளியாகி 19 வருடங்கள் ஆனதயொட்டி இந்த படத்தின் போது எடுத்த சில அரிய புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் இயக்குனர் சேரன். இப்படி ஒரு நிலையில் சன் தொலைக்காட்சியின் சன் நெக்ஸ்ட் ட்விட்டர் பக்கத்தில் இந்த படம் குறித்து ட்வீட் ஒன்று போடப்பட்டது.

அதில் அருண் விஜய் பெயரை டேக் செய்துவிட்டு சேரன் பெயரை டேக் செய்யாததால் ரசிகர் ஒருவர் ‘ஒரு இயக்குனர் இல்லாமல் ஒரு திரைப்படம் உருவாகி விடுமா.. அந்த இயக்குனர் உருவாக்கும் படம் வேண்டும் ஆனால் அவர் பெயரை இணைக்க மாட்டோம் என்பது எந்த வகையான அணுகுமுறை’ என்று பதிவிட்டு இருந்தார். அதற்கு சேரன் ‘. தெரியாமல் நிகழ்ந்த பிழையாக இருக்கலாம்.’ என்று பதிவிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

இதை தொடர்ந்து சன் நெக்ஸ்ட் ட்விட்டர் பக்கத்தில் பாண்டவர் பூமி படம் குறித்து போட்ட அந்த டீவீட்டிற்கு கீழ் ‘ உங்களது படைப்புகள் பல இளைஞர்களுக்கு ஓர் பாடமாகவும், உறுதுணையாகவும் இருந்திருக்கிறது. உங்கள் அன்பிற்கு நன்றி.’ என்று சன் நெக்ஸ்ட் ட்விட்டர் பக்கம் பதிவிட்டு இருந்தது. அதற்கு பதில் அளித்த சேரன் ‘ உங்களது பாராட்டுக்கும் அன்பிற்கும் பெருமகிழ்ச்சி.. SunTV, sunnxtக்கு எனது ஒரே வேண்டுகோள்.. திரைப்படங்கள் பற்றிய பதிவுகளில் அந்த திரைப்படத்தின் இயக்குனரின் பெயரை (tag) இணைக்கவும்.. இயக்குனருக்கான அங்கீகாரமும் அடையாளமும் இங்குதான் கொடுக்கப்படவேண்டும். நன்றி.

Advertisement