இனி என்னை சேரப்பானு கூப்படாதீங்க, ஏன்னா – மூஞ்சில் அடித்தது போல சேரன்.

0
1443
cheran
- Advertisement -

தமிழில் விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மத்த ரெண்டு சீசன்களை விட பட்டையைக் கிளப்பியது சொல்லலாம். இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் மத்த ரெண்டு சீசன்களை விட காதல், கலவரங்கள், சண்டைகளுக்கு பஞ்சமே இல்ல. அந்த அளவிற்கு வேற லெவல்ல போயிருந்தது. இந்த சீசன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பேசப்பட்டார் இயக்குனர் சேரன்.

-விளம்பரம்-

சேரன் அவர்கள் கடைசியாக திருமணம் என்ற படத்தை இயக்கி இருந்தார். அதற்கு பின் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் மற்றும் லாஸ்லியாவின் காதல் கதை தான் ஹைலைட்டாக இருந்தது. கவின் மற்றும் லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இருந்த போது இவர்களது உறவை பற்றி அதிகம் கவலைப்பட்டது சேரன் தான். சேரன் அவர்கள் லாஸ்லியாவிற்கு ஒரு தந்தை போலத் தான் பழகி வந்தார். அதே போல லாஸ்லியா சேரன் பற்றி சொன்னால் கவினுக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

இதனால் லாஸ்லியாவிடம் கவினை பிரிக்க சேரனும், சேரனிடம் இருந்து லாஸ்லியாவை பிரிக்க கவினும் பல்வேறு செயல்களை செய்து வந்தார்கள். ஆனால், சேரனின் உண்மையான பாசம் லாஸ்லியாவிற்கு தெரியாமல் போனது. மேலும், சேரனின் மகள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற போது கூட லாஸ்லியாவிடம் பேச வேண்டாம், அவளை மகள் என்று அழைக்க வேண்டாம் என்று கூறி இருந்தார். ஆனால், அப்போதும் சேரன் அவர்கள்பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கூட லாஸ்லியாவை மகளாக தான். பார்த்து வந்தார்.

அதே போல லாஸ்லியா, எப்போதும் சேரனை, சேரப்பா சேரப்பா என்று தான் அழைத்து வந்தார். இந்த நிலையில் ட்விட்டரில் ரசிகர் ஒருவர், சேரனை லவ் யூ சேர்ப்பா என்று அழைத்து இருந்தார். அதற்க்கு பதில் அளித்த சேரன். தயவு செய்து என்னை சேரப்பா என்று அழைக்காதீர்கள். அது பெரிய பேரப்பா. அந்த பெயர் எனக்கு பிடிக்கவில்லை. என்னை சேரன் அல்லது சேரன் சார் என்று அழைத்தால் போகும் என்று கூறியுள்ளார் சேரன்.

-விளம்பரம்-
Advertisement