அட, சிம்புதேவன், பாண்டிராஜ் எல்லாம் சேரன் அசிஸ்டன்டா – பாண்டவர் பூமி ஷூட்டிங் ஸ்பாட்டின் அரிய புகைப்படங்கள்.

0
1636
cheran

தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் சேரனும் ஒருவர். இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், ராமன் தேடிய சீதை, யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களை இயக்கியும், நடித்தும் உள்ளார். அந்த வகையில் சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. வசூல் சாதனை பெற்றது என்றும் சொல்லலாம்.

Image

இந்த படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே பாடல் தேசிய விருது பெற்றது. சேரன் அவர்கள் இயக்கிய பல படங்களுக்காக தேசிய விருதுகளை வாங்கி உள்ளார்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சேரன் அவர்கள் ராஜாவுக்கு செக் என்ற படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஹீரோவாக நடித்து உள்ளார். இந்த படத்தை சாய் ராஜ்குமார் இயக்கி இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் பாண்டவர் பூமி படம் வெளியாகி 19 வருடங்கள் ஆனதயொட்டி இந்த படத்தின் போது எடுத்த சில அரிய புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இயக்குனர் சேரன். மேலும், அந்த பதிவில் பாண்டவர் பூமியின் உதவி இயக்குனர்கள்… சிம்புதேவன், ராம்ராஜ், விஜயசங்கர், பாண்டிராஜ், நான், ராமகிருஷ்ணன்.. மைசூர் படப்பிடிப்பின் போது நான், அருண்விஜய், ராஜ்கிரன் சார். என்று பதிவிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இயக்குனர் சேரன் ராஜாவுக்கு செக் படத்தில் நடித்திருந்தாலும், இவரை இயக்குனராக பார்க்கவே ரசிகர்கள் பலரும் விரும்புகிறார்கள். மேலும், இயக்குனர் சேரன் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

-விளம்பரம்-
Advertisement