தென்னிந்திய திரைப்பட உலகில் இயக்குனராக பணியாற்றி வருபவர் சேரன். இவர் தமிழ் திரைப்படங்களில் நடிகராகவும் இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார். தற்போது விஜய் டிவி தொலைக்காட்சிகளில் பல மாதங்களாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக சேரன் அவர்கள் பங்கு பெற்றார் .மேலும் சில வாரங்களுக்கு முன்னால் அதாவது பிக்பாஸ் வீட்டில் 90 நாட்கள் இருந்த நிலையில் சேரன் வெளியேற்றப்பட்டார். மேலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார்

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சேரன் பேசுகையில், விஜய் சேதுபதி என்னை பிக்பாஸ் வீட்டிற்குப் போகச் சொன்னது உண்மைதான். நான் அவரை வைத்து படம் இயக்க ரெடி ஆகிவிட்டேன். ஜனவரி, பிப்ரவரில ஷூட்டிங் போறதா இருந்தது. அப்போதான் இந்த வாய்ப்பு வந்தது. அது பற்றி கேள்விப்பட்டு, விஜய் சேதுபதி என்னை பிக்பாஸில் கலந்துகொள்ளுமாறு வலியுறுத்தினார். போனா ரெண்டு விஷயங்கள் நடக்கும்னு சொன்னார். ஒன்னு, சில வருடங்களாக நீங்கள் அதிகம் படங்கள் பண்ணாததால் இப்போ இருக்கும் இளைஞர்களுக்கு உங்களை குறைவாகத்தான் தெரியும், நீங்க அதில் கலந்துகொண்டால் மீண்டும் உங்களைப் பற்றி அனைவருக்கும் தெரியும் வாய்ப்பு ஏற்படும். இன்னொன்னு, உள்ள உங்களுக்கு பல அனுபவங்கள் கிடைக்கும். அதை நீங்கள் மக்களுக்கு சொல்லலாம் என்றார். சீக்கிரமே நான் அவரை வைத்து படம் இயக்குவேன் என்று கூறியிருந்தார்.
இதையும் பாருங்க : பிக் பாஸ் இருந்தும் TRP யில் அதல பாதாளம் சென்ற விஜய் டிவி.! முதல் இடத்தில் எந்த டிவி தெரியுமா.!
மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கமலை வைத்து சேரன் 'தேவர் மகன் 2' படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து கேள்விகள் கேட்கப்பட்டபோது, கமல் சாரை வைத்து ஒரு படம் இயக்க எனக்கு ஆசைதான். ஆனா அது குறித்து என்னால் அங்கு பெரிதாக பேச முடியலை. ஏன்னா, உள்ள போகும்போது ஒரு 15 நிமிஷம், வெளியே வந்தப்போ ஒரு 15 நிமிஷம் அந்த மேடையில் அவரை சந்தித்ததுதான். மற்றபடி அவரை நான் சந்திக்கவில்லை. ''தேவர் மகன் 2'க்கு கதை இருக்கு சார், நீங்க சொன்னீங்கன்னா உடனே பண்ணலாம்' என்று மட்டும் அவரிடம் சொல்லியிருக்கேன். ஆனால் அதைத் தாண்டி இன்னும் எதுவும் பேசவில்லை. வாய்ப்பு அமைந்தால் கண்டிப்பாக அவருடன் பணியாற்றுவேன் என்று கூறியுள்ளார் சேரன்.

1992ம் ஆண்டு பரதன் இயக்கத்தில் வெளிவந்தது தேவர் மகன் படம் .இந்த படத்தில் நடித்தும்,தயாரித்தும் உள்ளது உலகநாயகனே. இந்த படத்தில் சிவாஜிகணேசன், கவுதமி, கா.கா.ராதாகிருஸ்ணன், ரேவதி,நாசர்,வடிவேலு என்று பல நடிகர்கள் நடித்து உள்ளனர்.மேலும், இந்த படத்திற்கு இளையராஜா அவர்கள் இசையமைத்து உள்ளார்.இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத்தந்தது.அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்கு 5 தேசிய விருதுகள் கிடைத்தது.மேலும், இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிந்தியில் தேவர் மகன் படத்தை விரசாத் என்று ரீமேக் செய்தார்கள்.இந்த தேவர் மகன்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறம் இருக்க சேரன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்க உள்ள புதிய படத்தின் பணிகளை செய்து கொண்டுள்ளார் இயக்குனர் சேரன். விஜய் சேதுபதியின் புதிய படத்தின் குறித்த தகவல்கள் அதிகாரபூர்வமாக விரைவில் வெளியாகும் என்று கூறியிருந்தார். இதனால் இது விரைவில் நடக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர் .
பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.




