அநியாயமா கொன்னுட்டானுங்க அம்மா. ட்விட்டரில் புலம்பிய சேரன்.

0
27992
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் சேரனும் ஒருவர். இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், ராமன் தேடிய சீதை, யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களை இயக்கியும், நடித்தும் உள்ளார். அந்த வகையில் சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. வசூல் சாதனை பெற்றது என்றும் சொல்லலாம். இந்த படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே பாடல் தேசிய விருது பெற்றது. சேரன் அவர்கள் இயக்கிய பல படங்களுக்காக தேசிய விருதுகளை வாங்கி உள்ளார்.

-விளம்பரம்-
சேரன்

- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சேரன் அவர்கள் ராஜாவுக்கு செக் என்ற படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஹீரோவாக நடித்து உள்ளார். இந்த படத்தை சாய் ராஜ்குமார் இயக்கி உள்ளார். இந்த படத்தில் சேரனுக்கு ஜோடியாக சராயூ நடித்து உள்ளார்.

இந்த படத்தில் நடிகர் இர்பான் அவர்கள் வில்லனாக நடித்து உள்ளார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் உள்ளார் டாங்கே வர்மா நடித்து உள்ளார். இந்தப் படத்தை சோமன் மற்றும் தாமஸ் இணைந்து தயாரித்திருந்தார்கள். எஸ்.டி.சி பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிட்டது. மேலும், இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றிருந்தாலும் எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை.

-விளம்பரம்-

தற்போது இந்த ராஜாவுக்கு செக் படம் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று உள்ளது. இந்த நிலையில் ரசிகை ஒருவர் ராஜாவுக்கு செக் படத்தை பார்த்தேன். நல்ல திகில் படமாக இருந்தது என்று பாராட்டி கருத்து பதிவிட்டு இருந்தார். இதற்கு சேரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியது,

‘அநியாயமாக படத்தை கொன்னுட்டாங்கம்மா. எங்க ஆத்தா கொடுத்த பால் எல்லாம் ரத்தமா போகுதேன்னு தேவர் மகன் படத்தில் வசனம் இருக்கும். அப்படி கஷ்டப்பட்டு உழைத்ததை காசுக்கு ஆசைப்பட்ட நாய்ங்க கொன்னுட்டாங்கம்மா. அவர்கள் நல்லா இருப்பார்களா? என் வயிறு எறியுதும்மா. இது அவர்களை சும்மா விடாது. எங்களோட உழைப்பை அநியாயமாக ஏமாத்திட்டாங்கமா என்று ஆவேசமாக சேரன் அவர்கள் பதில் அளித்து உள்ளார்.

Advertisement