சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த ஒரே வழி – முதலமைச்சருக்கு சேரன் ட்வீட்.

0
5336
cheran
- Advertisement -

நாளுக்கு நாள் சென்னையில் கரோனாவின் தாக்கம் காட்டுத்தீயை வேகமாக பரவி வருகிறது. இந்த நிலைமையில் தமிழக முதல்வருக்கு இயக்குநர் சேரன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. அதில் சில மாவட்டங்களுக்கு மட்டும் தளர்வுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு. தற்போது சென்னையில் கொரோனாவின் அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஜூன் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. இதனால் சென்னைக்கு பிழைப்புக்காக வந்த பல மக்கள் பல்வேறு வாகனங்களின் மூலம் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர்.

-விளம்பரம்-

மேலும், இ-பாஸ் இல்லாமல் வெளியூர் செல்பவர்களைத் தடுக்க மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து காவல்துறையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சென்னையில் கொரோனா தொற்று இல்லாதவர்களைச் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று இயக்குநர் சேரன் அவர்கள் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து இயக்குநர் சேரன் தனது சமூக வலைதளப் பதிவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரின் ட்விட்டர் பக்கங்களில் கூறியிருப்பது,

- Advertisement -

ஐயா தற்போது சென்னையின் நிலை சுகாதார ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மிக மோசமாக உள்ளது. இதனால் சென்னை மக்கள் கவலையில் உள்ளார்கள். நாளுக்கு நாள் கொரோனா தாக்கத்தின் பயம் அதிகரிக்கும் நிலையில் வீட்டில் 3 மாதங்களுக்கு மேலகாக முடங்கிக் கிடப்பவர்களுக்கு நாமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. இந்த பிரச்சனை 15 நாட்களில் முடிந்துவிடும் என்று நினைத்து சொந்த ஊருக்குப் போகாமல் தங்கி இருந்த மக்கள் இங்கு நிறைய பேர் உள்ளனர். அவர்கள் இப்போது போக நினைக்கிறார்கள்.

அவர்கள் சுகாதாரமாக இருந்தாலும் வெளியிலிருந்து வரும் நபர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கு அதன் மூலம் கொரோனா பரவும் அபாயம் இருக்கிறது. ஆகவே சென்னையில் கொரோனாவை நீங்கள் கட்டுப்படுத்த சிறந்த வழி சென்னையில் வாழும் நோய்த்தொற்று இல்லாதவர்களை அவரவர் ஊருக்குப் பத்திரமாக சோதனை செய்து அனுப்பிவைப்பதே. அதன் மூலம் சென்னையில் கொரோனா நோய் உள்ளவர்களைக் கண்டறிந்து விரைவில் சரிசெய்ய ஏதுவாக இருக்கும். இது என் தாழ்மையான கருத்து. நாளுக்கு நாள் மக்களின் பொருளாதார நிலை மாறி கொண்டே வருகிறது. ஒரு வேளை சாப்பாட்டுக்காக அவர்கள் கை ஏந்தும் நிலை ஏற்பட்டு உள்ளது. அதனால் அவர்கள் தங்களின் சொந்த ஊருக்குச் செல்ல நினைக்கிறார்கள். அது நியாயமமான விஷயம். அதற்காக நீங்கள் யோசித்துச் செயலாற்ற வேண்டியது தங்களின் கடமையாகும் என இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement