தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சேரன். இவர் இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகரும் ஆவார். இந்நிலையில் இயக்குனர் சேரன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் வடிவேலுவின் பிறந்தநாளை முன்னிட்டு வெற்றிக்கொடிகட்டு பட நகைச்சுவைக் காட்சியை நினைவுபடுத்தும் விதமாக ஒரு ட்வீட் போட்டு வாழ்த்து கூறியுள்ளார். தற்போது இந்த டீவ்ட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தின் போது வடிவேலுக்கும் இயக்குனர் ஷங்கருக்கும் இடையேயான பிரச்சனை காரணமாக தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவை படங்களில் நடிக்கக் கூடாது என தடை விதித்தது. இதனால் பல வருடங்கள் வடிவேலு படங்களில் நடிக்காமல் இருந்தார். இருந்தாலும் இவருடைய நகைச்சுவைக் காட்சிகள் இடம்பெறாத தொலைக்காட்சிகள் இல்லை. மேலும், சோஷியல் மீடியாவில் எந்த ஒரு பிரச்சினை என்றாலும் சரி அதற்கு வடிவேலுவின் காமெடியை அடிப்படையாக வைத்தே மீம்ஸ் போட்டு வந்தவர்கள்.
சமீபத்தில் தான் தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது. இதனையடுத்து தற்போது வடிவேலு அவர்கள் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் என்ற படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் வடிவேலுவுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் ரசிகர்களும் சினிமா பிரபலங்கள் பலரும் சோசியல் மீடியாவில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இயக்குனர் சேரன் அவர்கள் தனது வெற்றிக் கொடிகட்டு பட நகைச்சுவையை காட்சி நினைவுபடுத்தும் விதமாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது, பிறந்தநாள் வாழ்த்துக்கள் வடிவேலு ஐயா. நவம்பர் 6 விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்கு சந்தில் இருந்து பேசுறேன். நீங்க மறுபடி துபாய்க்கு வந்தது சந்தோஷம் ஐயா. வாங்கய்யா பின்னலாம். நீங்க இல்லாம துபாய் ரோடு வெறிச்சோடி கிடக்கு. காமெடியில் நீங்க எப்பவுமே கிங் என்று பதிவிட்டுள்ளார்.