தயாரிப்பாளர் ரவீந்திரனின் பற்றி தற்போது சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.தமிழ் பட தயாரிப்பாளரான ரவீந்திரன் எண்ணற்ற படங்களை தயாரித்து இருக்கிறார். ஆனால் தற்போது இவர் அதிகம் பேசப்பட்டு வந்தது என்னவோ வனிதாவின் திருமண விஷயத்தில் தான். வனிதா பீட்டர் பவுல் என்பரை திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். ஆனால் ஏற்கனவே திருமணமான பீட்டர் பால் எப்படி விவாகரத்து பெறாமல் திருமணம் செய்து கொள்ளலாம் என்று தயாரிப்பாளர் ரவீந்திரன் கேட்ட கேள்வியால் ஒரே ஒரு வீடியோ மூலம் பிரபலம் அடைந்து விட்டார்.
தயாரிப்பாளர் ரவீந்திரன் எத்தனையோ படங்களை தயாரித்து இருக்கிறார். அவ்வளவு ஏன் கவின் நடிப்பில் வெளியான நட்புனா என்ன தெரியுமா படத்தைக்கூட ரவீந்திரன் தான் தயாரித்து இருந்தார்.ஆனால், இவர் ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டது என்னவோ கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது தான். பிக்பாஸ் நிகழ்ச்சி போது இவர் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும் போட்டியாளர்கள் குறித்தும் அடிக்கடி வீடியோக்களில் பேசிய விஷயங்கள் சமூகவலைதளத்தில் வைரலாக பரவியது.
அப்போதுதான் இவர் யார் என்பது பலருக்கும் தெரிய வந்தது. ஆனால், இவர் மிகப்பெரிய பிரபலமடைந்து என்னவோ வனிதா விஷயத்தில்தான். மூன்றாம் திருமணம் செய்துகொண்ட வனிதாவின் திருமண வாழ்க்கை குறித்து கருத்து தெரிவித்து இருந்ததால் இவருக்கு வனிதாவிற்கும் பெரும் பிரச்சனை வெடித்தது. ஒரு கட்டத்தில் இவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கும் வரை சென்றுவிட்டார், ஆனால், தற்போது இவர் வனிதாவை பற்றி பேட்டிகளில் பேசுவது கிடையாது.
இந்த நிலையில் நேற்று பிரபல இயக்குனரான பாரதிராஜாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பாரதிராஜாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் குறிப்பிட்டுள்ள ரவீந்திரன், ஒன்றரை வருடத்திற்கு முன்னால் நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு வீடு திரும்பிய போது பாரதிராஜா என்னை வீட்டில் வந்து சந்தித்தார். அப்போது அவர் என்னிடம்’எத செஞ்சாலும் தைரியமா செய்டா என்று கூறினார் என்று பதிவிட்டிருக்கிறார்ரவீந்திரன்.