ஜூலி முதல் பாலா வரை, போட்டியாளர்களாக பிக் பாஸ் பிரபலங்கள் – நடுவர்கள் யார் ? என்ன நிகழ்ச்சி ?

0
898
BB
- Advertisement -

தொலைக்காட்சிகள் அனைத்தும் சீரியலை தாண்டி பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதில் ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றுவிடுகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்தி வருகிறது. அந்த வகையில் சூப்பர் சிங்கர், குக்கு வித் கோமாளி, ஜோடி போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பல சீசன்களை கடந்து ஹிட் அடித்தது.

-விளம்பரம்-

என்னதான் பல ரியாலிட்டி ஷோ வந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை அடித்துக்கொள்ளும் வகையில் விஜய் டிவியிடம் வேறு எந்த ரியாலிட்டி ஷோவும் இல்லை என்பது தான் உண்மை. அதனால் தான் பிக் பாஸ் முடிந்தால் கூட பிக் பாஸ் போட்டியார்களை வைத்து எதாவது ஒரு நிகழ்ச்சியை தொடர்ந்து கொண்டு வருகிறது விஜய் டிவி. அந்த வகையில் பிக் பாஸ் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களை வைத்து ஒரு புதிய ரியாலிட்டி ஷோ ஒன்றை விஜய் டிவி துவங்க இருக்கிறது.

இதையும் பாருங்க : பேண்டை கழட்டி படு மோசமான போஸ் கொடுத்த கிளாமர் பாம் நடிகை ஸ்ரீரெட்டி.

- Advertisement -

சரி, என்ன நிகழ்ச்சி ? நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யார் ? என்ற கேள்வி எழுகிறதா ? வேறு ஒன்றும் புதுமையான நிகழ்ச்சி இல்லை. விஜய் டிவியில் பல ஆண்டுகள் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியை தான் தற்போது பிக் பாஸ் பிரபலங்களை வைத்து துவங்க இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு ‘பிக்பாஸ் ஜோடி’ என்று பெயர் வைத்துள்ளனர். பிக் பாஸ் சீசன் 1 முதல் 4 வரை கலந்து கொண்ட போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இதுவரை சோம், கேபி, ஆஜித், ஷிவானி, பாலா, ஜூலி, சென்றாயன், மகத், யாஷிகா ஆனந்த், ஷாரிக், பாத்திமா பாபு, மும்தாஜ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் உறுதியாகியுள்ளார்களாம். போட்டியாளர்களை அவரவர் கலந்துகொண்ட சீசன் வாரியாகப் பிரிச்சுடுவாங்க. யார், யார் கூட ஜோடி சேரப் போறாங்கன்னு அடுத்த சில நாட்கள்ல முடிவாகிடும்.  இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக நடிகர் ஜீவாவும் நடிகை ரம்யா கிருஷ்ணனும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். விரைவில் இந்த நிகழ்ச்சி பற்றிய ப்ரோமோ வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement