டேனி “Hair Style” ரகசியம் இதுதான்.! அவரே சொன்ன சுவாரஸ்யமான உண்மை.!

0
521
Danie-Annie-pope

விஜய் சேதுபதி நடித்த “இதற்கு தனே ஆசை பட்டாய் பாலகுமாரா ” என்ற படத்தில் சுமார் மூஞ்சி குமராக நடித்து பலரையும் கவர்ந்தவர் நடிகர் டேனி. அந்த படத்தில் இவரது வசனம் பிரபலமடைந்த அளவிற்கு இவரது வித்யாசமான ஹேர் ஸ்டைலும் அதிகம் பேசப்பட்டது. சமீபத்தில் தனது ஹேர்ஸ்டைல் குறித்த ஒரு வரலாறையே கூறியுள்ளார் டேனி.

Daniel-in-Bigg-Boss

- Advertisement -

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்று வருகிறார். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் ‘கனா காணும் காலங்கள்’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் பள்ளி மாணவர்களாக இருந்து வருகின்றனர். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் டேனி பிக் பாஸ் வீட்டில் இருக்கும் கேமரா முன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது தனது முடியின் ரகசியத்தை பற்றி கூறியுள்ளார் டேனி.

அவர் கூறியதாவது ‘எனக்கு இதுமாதிரலா முடி விட வேணும்னு ரொம்ப ஆச,ஸ்கூல்ல முடி விட்டுணு போனா எங்க பி.டி சார் அடிப்பாரு. ஒரு தடவ நான் ‘நந்தா ‘ படத்துல கருணாஸ் ஒரு முடி மட்டும் நீட்டா விட்டிருப்பது போல நானும் புள் சதுரவட்ட கட்டிங் வெட்டிக்கிட்டு ஒரு முடிய மட்டும் நீட்டா விட்டுட்ட. நான் பண்ணது எங்க அப்பாக்கும் தெரியாது, யாருக்கும் தெரியாது. ஒரு நாள் பி. டி க்ளாசப்ப கிரௌன்டா சுத்தி ஒட்டிக்கிட்டு இருந்தேன். அப்போது என் ஹேர்ஸ்டைலை பார்த்து பொண்ணுங்கெல்லாம் அசந்துட்டாங்க . திடீர்னு என் முன்னால ஒரு உருவம் நின்னுச்சி, யார்னு பாத்தா எங்க பி. டி மாஸ்டர். உடனே என் முடிய புடிச்சி இழுத்துட்டு போய் செம்பருத்தி பூ ஒன்ன என் முடியில கட்டி விட்டுட்டு, கிரௌன்டா ரவுண்டு அடிக்க சொல்லிட்டாரு .

daniel

நானும் ஒரு 400 மீட்டர் ஓடிட்டு வந்து ஒக்காந்துட்டேன். அதுக்கு அப்புறம் என்னுடைய பி. டி சார் என்னுடைய முடிய கட் செஞ்சிட்டார். அன்னிக்கு முடிவு பண்ண பெரியவனாகி நீளமாக முடி வளக்க வேணும்னு. அதனால் தான் இந்த முடியை வெட்ட மனசு வர்ல. ஆனா இப்போ ஸ்கூல் டிரஸ் போட்டுக்கிட்டு அதே முடியில இருப்பது ரொம்ப ஹாப்பியா இருக்கு’ என்று கூறியுள்ளார்.