பிக் பாஸ் மேடையில் ஐஸ்வர்யா, யாஷிகாவை அசிங்கப்படுத்திய டேனி.! என்ன இப்படி சொல்லிட்டாரே

0
312
yashika-Aishwarya

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் டேனி வெளியேற்றப்பட்டார். எந்த வாரமும் இல்லாத அளவிற்கு கடந்த வார எலிமினேஷன் அறிவிப்பு வித்தியாசமாக நடைபெற்றது. பிக் பாஸ் போட்டியாளர்களிலேயே கடினமான போட்டியாளர் என்று பெயர் எடுத்த டேனி வெளியேறியதும் சக போட்டியாளர்கள் யாரும் எந்த ஒரு ஆரவாரமின்றியும் அவரை வழியனுப்பி வைத்தனர்.

yashika

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த டேனி மேடையில் பேசிய டேனி , நான் வெளியே வந்ததற்கு யாராவது அழறாங்களா பாருங்க சார் என்று கமலிடம் கூறியிருந்தார். அதே போல போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு பட்டபெயரை கொடுத்த டேனி யாஷிகாவிற்கு அராத்து என்றும் ஐஸ்வர்யாவிற்கு அல்லக்கை என்ற பட்டத்தையும் அளித்தார் டேனி.

ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா குறித்து பேசிய டேனி ஒரு கட்டத்தில் நான் என்ன செய்தாலும் வீட்டில் அனைவருக்கும் தவறாக தெரிந்தது. அதனால் நான் என்ன செய்ய வேண்டும் என்ன பேச வேண்டும் என்று யோசித்து யோசித்து தான் பேசினேன் அப்போது எனக்கு இவர்கள் இருவரை தான் என்னுடைய அல்லக்கையாக பயன்படுத்திக்கொண்டேன் என்று சிரித்துக்கொண்டே கூறினார் டேனி.

Danie

Bigg-boss

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய போது டேனி மீது மக்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால், இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே நாளிலிருந்தே டேனி, ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவிற்கு தான் எப்போதும் ஆதரவாக நடந்து வந்து கொண்டிருந்தார். அவர்கள் என்ன தவறு செய்தலும் டேனி கண்டுகொள்ளாமல் தான் இருந்தார். இது டேனி மீது ரசிகர்களுக்கு எரிச்சல் ஏற்பட ஒரு முக்கிய காரணமாக இருந்து வந்தது. ஆனால், இத்தனை வாரங்கள் வெளியேறிய போட்டியாளர்களை விட டேனியின் வெளியேற்றம் சற்று ஜாலியாகவே முடிந்தது.