தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” என்ற படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் டேனி, பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று மேலும் பரிட்சியமானார், தற்போது டேனி, நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான “அறம் ” படத்தை இயக்கிய இயக்குனர் கோபி நைனார் இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
பெயரிடப்படாத இந்த புதிய படத்தில் நடிகர் ஜெய் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. நடிகர் ஜெய் தற்போது “பார்ட்டி, நீயா 2 ” போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் கோபி நைனார் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார் நடிகர் ஜெய். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதியே துவங்கிவிட்டது.
இயக்குனர் கோபி நைனார், நடிகர் ஆர்யாவை வைத்து ஒரு படம் இயக்கபோவதாகவும், அந்த படத்தில் நடிகர் ஆர்யா ஒரு குத்துச்சண்டை வீரராக நடிக்க இருக்கிறார் என்றும் ஏற்கனவே சில தகவல்கள் வெளியாகியிருந்தது. தற்போது அந்த கதையில் தான் நடிகர் ஜெய் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இன்னும் இந்த படத்தில் நடிக்கும் இதர நடிகர்கள் பற்றியும், படத்தில் பணிபுரியும் கலைஞர்கள் பற்றியும் எந்த வித தகவலும் வெளியாகாத நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகர் டேனி இணைந்துள்ளார். மேலும், இந்த படத்தை பற்றி கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.