மதுமிதாவிற்கு உண்மையில் நடந்தது என்ன.! மதுமிதாவை நேரில் சந்தித்த டேனியல் பேட்டி.!

0
37771
denial-madhu
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த சனிக்கிழமை மதுமிதா வெளியேற்றப்பட்டது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. கடந்த சில தினங்களாக மதுமிதா மற்றும் ஆண்கள் அணிக்கும் பிரச்சனை ஓடியது. இந்த நிலையில் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-
Madhu

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதா தன்னை காயப்படுத்தியதற்கு முக்கிய காரணமே இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற ஹெலோ டாஸ்கின் போது ஏற்பட்ட பிரச்சனை தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது. மேலும், மதுமிதாவின் இந்த தற்கொலை முயற்சிக்கு காரணம் ஆண்கள் தான் என்று பலரும் கூறி வருகின்றனர்.

இதையும் பாருங்க : வனிதாவை புதிய பட்டப் பெயர் வைத்து அழைத்த கஸ்தூரி.! மன்னிப்பு கேட்க சொல்லும் வனிதா.!

- Advertisement -

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மதுமிதாவை நேரில் சந்தித்து பேசியுள்ளார் பிக் பாஸ் முன்னாள் போட்டியாளரும் நடிகருமான டேனி, இதுகுறித்து பேசியுள்ள அவர், நான் மதுமிதாவிற்கு இது போல ஆகிவிட்டது என்கின்றது பதறிப்போய்விட்டேன். இதனால் அவர் வெளியே வந்ததும் அவரை சந்திக்க வேண்டுமென்று அவருக்கு போன் செய்தேன்.

ஆனால், அவரோ ஒப்பந்தம் படி இப்போதைக்கு எதை பற்றியும் பேசக்கூடாது. அப்படி பேசினால் என்னுடைய சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு விடும் சிறிது நாட்களுக்கு பின் நாம் இதைப்பற்றி பேசுவோம் டேனி என்று கூறினார். இருப்பினும் அவரை சந்திக்க அவருக்கே தெரியாமல் அவரது வீட்டிற்கு சென்று சர்ப்ரைஸ் செய்யலாம் என்று மது வீட்டிற்கு சென்றேன்.

-விளம்பரம்-

நான் உள்ளே சென்ற போது அவரது காயத்திற்கு மருத்துவர் ஒருவர் சிகிச்சை அளித்து கொண்டு இருந்தார். அப்போது தான் நான் பார்த்தேன் அவரது கையில் மிகவும் மிக ஆழம்,மான காயங்கள் இருந்தது. நான் எனக்கு தெரிந்த வரை சொல்கிறேன் அன்று நடந்த டாஸ்கின் போது மதுமிதா ஏதோ கருத்து சொல்லி இருக்கிறார். அதனை மற்ற போட்டியாளர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், அவர்கள் மதுவை பயங்கரமாக கலாய்த்துள்ளனர்.

அதன் பின்னர் தான் அவள் கத்தியை எடுத்து கிழித்துக்கொண்டுள்ளார். அவரது கையில் ரத்தம் சொட்ட கஸ்தூரி மட்டும் தான் ஈர துணியை எடுத்து காயத்தை அமுக்கி பிடித்துள்ளார். அதனால் தான் வெளியேறும் போது அவள் கஸ்தூரி மற்றும் சேரனிடம் மட்டும் தான் பேச விரும்புவதாக கூறினார். எது எப்படியோ இவை அனைத்திற்கும் மதுமிதா பதில் சொன்னால் தான் உண்மை சரியாக இருக்கும் என்று கூறியுள்ளார் டேனி.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement