கமல் சார் ஒரு எபிசோடை கூட பார்த்தது இல்லை.! பல உண்மைகளை சொன்ன முன்னாள் போட்டியாளர்.!

0
28531
Bigg-Boss-3-kamal
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கியதிலிருந்தே முன்னாள் போட்டியாளர்களை தேடி கண்டுபிடித்து பேட்டி எடுத்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த பிக் பாஸ் சீசனில் பங்குபெற்ற டேனியல் , பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் போட்டியாளர்கள் குறித்தும் பல்வேறு விஷங்களை பகிர்ந்துள்ளார்.

-விளம்பரம்-

இந்த பேட்டியில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசிய அவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரும் அனைவரும் நடிகர்கள்தான் அவர்கள் நடிக்க தான் செய்கின்றனர். இதில் வரும் ஓட்டிங் சிஸ்டம் கூட ஒரு பொய்யான விஷயம் தான். பிக் பாஸ் நிகழ்ச்சியால் அதை நடத்துபவர்களுக்கு பத்து பைசா பிரயோஜனம் இல்லை பார்ப்பவர்களுக்கும் பத்து பைசா பிரயோஜனம் இல்லை.

- Advertisement -

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எனக்கு ஒரு மாற்றமும் தெரிந்தாக எனக்கு தெரிந்தது இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாரும் நல்லது சொல்வதற்காக வரவில்லை இதில் அனைத்தும் வியாபாரம் தான் அதனால் இந்த நிகழ்ச்சிக்கு யார் தேவையோ அவர்களை மட்டுமே தேர்வு செய்வார்கள்.

-விளம்பரம்-

அதிலும் கமல் சார் மட்டும் தான் இந்த நிகழ்ச்சி குறித்து தெளிவான கண்னோட்டத்தில் இருக்கிறார். அவர் இந்த நிகழ்ச்சியின் ஒரு எபிசோடை கூட பார்ப்பது இல்லை. அவர் பங்குபெறும் சனி மற்றும் ஞாயிற்று கிழமை மட்டும் அவருக்கு மைக்கில் இந்தெந்த கேள்விகள் கேட்க வேண்டும் என்று சொல்வார்கள் அதனை அவர் கேட்பார். அதன் பின்னர் அவருக்கும் அந்த நிகழ்ச்சிக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை என்று கூறியுள்ளார் டேனி.

Advertisement