அக்மார்க் தமிழச்சி, Tik Tok டூ பிக் பாஸ் வாய்ப்பு – யார் இந்த இளம் போட்டியாளர் தனலட்சுமி.

0
356
Dhanalakshmi
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பல எதிர்பார்களுடன் அனைவரும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று விஜய் டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாக இருக்கிறது. இதனால் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். அதோடு பிக் பாஸ் சீசன் 6ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்களை பற்றி அறிய எதிர்நோக்கி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

அதேபோல் கமல் தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார். அதற்கான ப்ரோமோக்கள் வெளியாகி இருந்தது. இந்த முறை நிகழ்ச்சியில் கொஞ்சம் வித்தியாசமாக எடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த வகையில் பொது மக்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியின் போட்டியாளர்களை தேர்வு செய்வதில் சேனல் தரப்பில் இருந்து கூடுதல் கவனம் செய்யப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி:

மேலும், இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாக போகிறது. தினமும் டிவியில் ஒரு மணி நேரம் அதாவது 9:30 ஒரு ஒளிபரப்பாகும். பின் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. கிட்டத்தட்ட போட்டியாளர்கள் இறுதி செய்யப்பட்டு விட்டனர். மேலும், போட்டியாளர் குறித்த இறுதி பட்டியல் தற்போது சோசியல் மீடியாவில் கசிந்து கொண்டே வருகிறது.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

அந்த வகையில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ஷிவின் கணேசன், ராபர்ட், ஷெரினா, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் என்ற ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி அரவிந்த், விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி என பல பேர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் போட்டியாளர்கள் அனைவரும் பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் குவாரன்டைனில் வைக்கப்பட்டு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

பிக் பாஸ் ஆர்மி:

மேலும், சில போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக இருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று பிரம்மாண்டமாக தொடங்கிய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் குறித்து விவரங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்தவகையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் தனலட்சுமி. இவர் ஈரோடை சேர்ந்தவர். இவர் டிக்டாக் வீடியோக்கள் மூலம் 4 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்களை பெற்றவர். தற்போது இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்களை அதிகமாக வெளியிட்டு வருகிறார்.

நடிப்பில் ஆர்வம் :

சிறுவயதிலேயே நடிப்பதில் ஆர்வம் கொண்ட இவர் சில குறும்படங்களிலும் பறை இசை ஆல்பத்திலும் நடித்து இருக்கிறார். அதேபோல் நிகழ்ச்சியில் ஜனனி கலந்து கொண்டு இருக்கிறார். இவர் இலங்கை தமிழர் ஆவார். இவரை தொடர்ந்து நிகழ்ச்சியில் ஷெரினா கலந்து கொண்டு இருக்கிறார். இவர் மாடல் ஆவார். இவர் வினோதய சித்தம் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். மேலும், இந்த முறை நிகழ்ச்சியில் பல யங்ஸ்டர்ஸ் கலந்து கொண்டு இருக்கிறார்கள். ஆகவே, இந்த முறை நிகழ்ச்சியில் யாருக்கு ஆர்மி தொடங்க இருக்கிறார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement