பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர் கேன்சரால் பாதிக்கப்பட்டு உதவிகேட்ட சிந்துவிற்கு உதவி செய்திருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 2010 ஆம் ஆண்டு இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் அங்காடித்தெரு. இந்த படத்தில் மகேஷ், அஞ்சலி, இயக்குனர் வெங்கடேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தனர். இந்த படம் பல்வேறு விருதுகளை கூட குவித்து இருந்தது. இந்த படத்தில் சின்னம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சிந்து.
அந்த படத்திற்கு பின் இவர் நாடோடிகள், தெனாவட்டு, நான் மகான் அல்ல, சபரி கருப்பசாமி குத்தகைதாரர், போக்கிரி போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ அங்காடித்தெரு திரைப்படம் தான். இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அங்காடித் தெரு பட நடிகை சிந்து படுத்த படுக்கையாக தனது சிகிச்சைக்கு உதவி கேட்டு வீடியோ வெளியிட்டுஇருந்தார் . அதில், நடிகை சிந்துவிற்கு மார்பக புற்று நோய் ஏற்பட்டது சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் தொடர் சிகிச்சைக்கு பணமில்லாததால் உதவி கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
சிந்து அளித்த பேட்டி:
மேலும், சினிமாவில் இருக்கும் பல உச்ச நட்சத்திரங்கள் கூட தனக்கு உதவவில்லை என்றும் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா சாரை ஒரு 10 முறை தொடர்பு கொண்டேன். ஆனால், அவர் அஜித்தை தொடர்பு முடியலன்னு சொன்னார். ஏன் இப்படி பொய் சொல்றீங்க என்று கூறி இருந்தார். இந்த நிலையில் டிக் டாக் தனலட்சுமி சிந்துவிற்கு ஒரு லட்சம் கொடுத்து பண உதவி செய்திருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. டிக் டாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தனலட்சுமி.
தனலட்சுமி குறித்த தகவல்:
இவர் ஷார்ட் பிலிம், சில படங்களில் சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருக்கிறார். இந்நிலையில் தனலட்சுமி, சிந்து வெளியிட்ட வீடியோவை பார்த்து அவருக்கு நேரில் சென்று ஒரு லட்சம் ரூபாய் பண உதவி செய்திருக்கிறார். இது குறித்து சிந்து கூறியிருந்தது, டிக் டாக் தனலட்சுமி பலருக்கும் தெரியும். அந்தப் பெண் எனக்கு போன் செய்து உங்களை பார்க்க வேண்டும் என்று சொன்னவுடன் நான் வந்து ஒரு 5000 ரூபாய் தருவார்கள்.
தனலட்சுமி செய்த உதவி:
நம்முடைய மருத்துவ செலவுக்கு வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால், அவர் வந்து இவ்வளவு பெரிய தொகையை கொடுத்து எனக்கு உதவுவார் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. சினிமா உலகில் எவ்வளவோ பெரிய பிரபலங்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு கூட இந்த மனசு வரவில்லை. ஆனால், இந்த சிறு வயதில் இந்த பெண் செய்திருக்கும் உதவி பெரியது. சினிமாவில் எத்தனையோ அமைப்புகள் எவ்வளவோ சங்கங்கள் எல்லாம் பிரபலங்கள் வைத்திருக்கிறார்கள்.
சிந்து கூறியது:
எதற்கு என்று தெரியவில்லை. ஒரு ஆர்டிஸ்ட், மக்களுக்கு உதவ தான் இதெல்லாம் வைத்திருக்கிறார்கள். ஆனால், ஒரு ஆர்ட்டிஸ்ட்கே இந்த நிலைமை? என்றால் மக்களுக்கு எங்க செய்ய போகிறார்கள்? பெரிய பிரபலங்களிடமெல்லாம் நான் உதவி கேட்டேன் செய்ய வரவில்லை என்று கண்ணீர் மல்க கூறி இருந்தார். இப்படி பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த சமயத்தில் தனலட்சுமி செய்து இருக்கும் உதவி ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.