செம்ம.! இந்த வாரம் இரண்டு வெளியேற்றம்.! இது என்ன எதிர்பாராத ட்விஸ்ட்.! ஷாக்கிங் வீடியோ.!

0
8685
cheran
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் நான்கு வாரமே இருக்கிறது. இந்த சீசன் டைட்டில் வின்னர் யார் என்பதற்கான சுவாரசியம் கூடி வருகிறது. இந்த வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற போகும் நிலையில் யார் வெற்றி பெறப் போவது என்ற மிகப்பெரிய கேள்வியும் எழுந்துள்ளது.

-விளம்பரம்-
https://www.youtube.com/watch?time_continue=14&v=ViTbghb5Oxg

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் போட்டியாளர்களுக்கு சவாலான டாஸ்க்கும் வழங்கப்படவில்லை என்று ரசிகர்கள் புலம்பி வந்த நிலையில் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே அதாவது இறுதி போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான டாஸ்க் நடைபெற்றுவந்தது. மேலும், இந்த டாஸ்க் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் முகென் அதிக புள்ளிகளை பெற்று இறுதி போட்டிக்கு நேரடியாக சென்றுள்ளார்.

இதையும் பாருங்க : பார்வையற்ற இளைஞருக்கு ஒரே நாளில் அடித்த அதிர்ஷ்டம்.! பாட வாய்ப்பு கொடுத்த பிரபல இசையமைப்பாளர்.!

- Advertisement -

இந்த வாரத்தின் நாமினேஷன் நேற்று நடைபெற்று இருந்தது. அதில் சேரன், கவின், லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ளனர். இந்த வாரம் சேரன் வெளியேறியதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது. அதே போல இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ஷெரின் காப்பாற்றபட்டுவிட்டதாக அறிவித்தார் கமல்.

இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அதில் சேரன் மற்றும் லாஸ்லியா இருவரையும் வீட்டை விட்டு விடைபெற்று வாருங்கள் என்று கூறுகிறார். அதன் பின்னர் லாஸ்லியா மற்றும் சேரன் இருவருமே தங்களது பொருட்களை மூட்டைகட்டகின்றனர். இதனால் இந்த வாரம் டபுள் எலிமினேஷன் இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement