பார்வையற்ற இளைஞருக்கு ஒரே நாளில் அடித்த அதிர்ஷ்டம்.! பாட வாய்ப்பு கொடுத்த பிரபல இசையமைப்பாளர்.!

0
1309
blind-singer
- Advertisement -

சமூக வலைத்தளங்களில் பிரச்சனைகள், சண்டைகள், சர்ச்சைக்குரிய விஷயங்கள், சந்தோஷமான நிகழ்வுகள், உதவிக்கரங்கள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் பதிவிட்டு ஷேர் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். அந்த வகையில் பார்வையற்ற இளைஞர் ஒருவர் பாடிய பாடல் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவி அவருக்கு படத்தில் பாட வாய்ப்பும் கிடைத்தது. இந்த இளைஞர் பாடிய பாடலை நெட்டிசன்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

-விளம்பரம்-

Jagdesh R ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಶನಿವಾರ, ಸೆಪ್ಟೆಂಬರ್ 21, 2019

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள நொச்சிப்பட்டி என்னும் கிராமத்தில் வாழ்ந்து வருபவர் திருமூர்த்தி. திருமூர்த்தி ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்.இவர் சிறு வயதிலேயே பார்வையும்,குடும்பத்தையும் இழந்து தனியாக வாழ்ந்து வருபவர்.சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘விசுவாசம்’ படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது.கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.இதில் டி. இமான் இசையமைப்பாளர் இசையில் சித் ஸ்ரீராம் பாடிய “கண்ணான கண்ணே, கண்ணான கண்ணே” என்ற பாடலை பாடியுள்ளார்.

இதையும் பாருங்க : பிரசாந்த் பதிவிட்ட ஷாக்கிங் வீடியோ.! தயவு செய்து நீக்குங்கள் என்று கெஞ்சிய ரித்திகா.!

- Advertisement -

இந்த பாடல் தமிழக மக்களின் மனதில் அதிக இடம் பிடித்து, பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. இந்த பாடலை யூடியூபில் 83 மில்லியன் பார்வையாளர்களுக்கும் மேலாக பார்த்து ரசித்துள்ளனர்.மேலும்,இந்த பாடலை பார்வையற்ற திருமூர்த்தி தன்னுடைய இனிமையான குரலில் பாடிக்கொண்டு இருந்தார். அதை அஜித் மதன் என்பவர் ரெகார்ட் செய்து அவருடைய சமூக வலைத்தளத்தில் (பேஸ்புக்கில்) பதிவிட்டிருந்தார்.

Jagdesh R ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಶನಿವಾರ, ಸೆಪ್ಟೆಂಬರ್ 21, 2019

அந்த வீடியோ பதிவு செய்த சில மணி நேரத்திலேயே லட்சக்கணக்கான மக்களை திரும்பிப் பார்க்க வைத்தது. மேலும் அந்த வீடியோ வெளிவந்து 24 மணி நேரத்திற்குள் மூன்று லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்தனர். மேலும், அந்த வீடியோவை 20,000 அதிகமான பேர் ஷேரும் செய்தார்கள் என்ற தகவல் வெளியானது. அதுமட்டுமில்லாமல், நேற்று இரவே விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் இமான் அவர்கள் அந்த பார்வையற்ற இளைஞர் பாடிய பாடல் வெளிவந்த வீடியோவை பார்த்தார்.

-விளம்பரம்-

மேலும், இவர் இந்த வீடியோவை பதிவிட்டு இவரை தொடர்பு கொள்ள இவருடைய மொபைல் எண்ணை தெரிவியுங்கள் ஆன்லைன் நண்பர்களே ! என்று ட்விட்டர் பக்கத்தில் கேட்டிருந்தார். உடனே, இரண்டு மணி நேரத்தில் மொபைல் நம்பர் தெரிந்ததும், அந்த இளைஞரிடம் இமான் பேசினார். அவர் சீக்கிரமே பார்வையற்ற இளைஞரை ஒரு பாடல் பாட வைக்கிறேன் என்று கூறியிருந்தார். மேலும் கடவுளின் ஆசிர்வாதமும், மக்களின் அன்பு பெற்று, எல்லா வளங்களுடன் நன்றாக இருப்பாய் என்று வாழ்த்தினார். இனி வரும் நாட்களில் திருமூர்த்திக்கு சந்தோஷமான தருணங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன எனவும் பதிவிட்டிருந்தார்.

இமான் இசையமைப்பில் திருமூர்த்தி பாடல்களைப் பாடப் போகிறார் என்பது சமூக வலைதளங்களில் பரவியது. திருமூர்த்தி பாடலை விரைவில் கேட்கலாம் என்று தெரிவித்திருந்தார். மேலும், இசையமைப்பாளர் இமான் அவர்கள் திரு மூர்த்தியின் தொலைபேசி எண் கிடைப்பதற்கு உதவி செய்த அனைத்து நெட்டிசன்களுக்கு நன்றி தெரிவித்தார். இதனால் இசையமைப்பாளர் இமானுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Advertisement