உச்ச கட்ட ட்ராமாவா இருக்கு, நானும் தான் இப்படி இருக்ககேன் – போட்டியாளர்களுடன் தன்னை ஒப்பிட்ட பாவனா. இது ரெண்டும் ஒண்ணா ?

0
990
bavana
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பிழிந்து வரும் டிராமாக்களை தாங்க முடியாமல் விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி நிகழ்ச்சிகள்இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று ஒரு தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது. தற்போது ஒளிபரப்பாகி வரும் சீசனில் கடந்த மூன்று வாரங்களாக சண்டைகளும் மற்றும் சென்டிமென்ட்டும் தான் ஓடிக் கொண்டு இருக்கிறது. அதிலும் அனிதா சம்பத் அடிக்கடி தன்னுடைய கணவரை நினைத்து ஒப்பாரி வைத்துக் கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

அதற்கு ஏற்றார் போல அடிக்கடி போட்டியாளர்களை அழ வைப்பதற்காகவே பிக்பாஸ் ஏதாவது டாஸ்க்கை கொடுத்து விடுகிறார். முதல் வாரத்தில் கடந்து வந்த பாதை என்ற டாஸ் கொடுக்கப்பட்டது. அதில் பெரும்பாலான போட்டியாளர்கள் தங்கள் வாழ்வில் பட்ட கஷ்டங்களை கூறி அழுதார்கள். அதேபோல நேற்றைய நிகழ்ச்சியில் கூட போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்றை கொடுத்திருந்தார். பிக்பாஸ் அப்போது அனைவருமே தாங்கள் செய்யும் நபர் குறித்து கூறி கண்ணீர் மல்க அழுதார்கள். இப்படி ஒரு நிலையில் விஜய் டிவி தொகுப்பாளினியான பாவனா பிக் பாஸ் குறித்து ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பதிவிட்டுள்ள பாவனா, நான் IPL பபுளில் (தனிமைபடுத்தப்பட்டு) 50 நாட்கள் ஆகி விட்டது. குடும்பத்தை பிரிந்து இருக்கும் நான் அழவில்லை உணர்ச்சி வசப்படவில்லை அல்லது என்னுடைய சகோதர சகோதரிகளுக்கும் அம்மாவிற்கு கால் செய்யவில்லை நான் உண்மையான மற்றும் நெருங்கிய நண்பர்களை கொண்டு இருப்பதை எண்ணி பெருமை அடைகிறேன் ஆனால் ஒரு மூன்று வாரம் பிக்பாஸ் போட்டியாளர்கள் செய்யும் இதெல்லாம் பார்க்க அபத்தமாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

இதை கண்ட ட்விட்டர் வாசிகள் சிலர் பாவனாவின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்தாலும், ஒரு சிலர் பாவனா கூறிய இந்த கருத்தை கழுவி ஊற்றுகிறார்கள். அதிலும் ஒரு சிலர், நீங்கள் சொல்வது தான் அபத்தமாக இருக்கிறது. நீங்கள் நிஜ உலகத்தில் இருக்கிறீர்கள். ஆனால், பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் அப்படி கிடையாது. அவர்களிடம் ஒரு போன் கூட கிடையாது. ஒப்பிடும்போது கொஞ்சமாவது எதார்த்தமாக யோசியுங்கள் என்றும் நீங்களும் அவர்களும் ஒன்று இல்லை என்றும் பாவனாவை வறுத்து எடுத்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement