வழக்கமாக நடத்தப்படும் “Elimination” போல் இல்லாமல் புது விதமாக நடத்தப்பட்ட வெளியேற்றம்..! அதிர்ச்சியில் போட்டியாளர்கள்.!

0
314
kamal

கடந்த ஆண்டு ஒளிபரப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும், தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் பல்வேறு புதுமையையான மாற்றங்கள் புகுத்துதபட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியை சுவாரசியமாக மாற்ற பல புதிய உத்திகளை கையாண்டு வருகின்றனர். இந்நிலையில் இதுவரை இல்லாத ஒரு புதுவிதமான நிகழ்வு தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்தேறி உள்ளது.

Kamal

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான ஏவிக்ஷன் நெருங்கிய நிலையில், இந்த வாரம் ஜனனி,சென்ராயன், பொன்னம்பலம் ஆகியோர் நமினஷனில் இருந்து வந்தனர். இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பொன்னம்பலம் வெளியேற்றபட்டுள்ளார் என்று ஏற்கனவே ஒரு தகவலை நமது வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இந்த வாரம் கமல் அவர்கள் எலிமினேஷனை ஒரு வித்யாசமான முறையில் அறிவித்திருக்கிறார்.

எலிமினேஷன் என்றாலே வழக்கமாக கமல் அவர்கள் போட்டியாளர்களை அகம் டிவி வழியாக சந்தித்து, மேடையில் நின்றுகொண்டு மக்கள் முன்பு தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போகும் நபரின் பெயரை அறிவிப்பார். ஆனால், இந்த வாரம் எலிமினேஷனை அறிவிக்க கமல் அவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள்ளே சென்றுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

Kamal

இந்த நிகழ்ச்சியில் முதன் முறையாக போட்டியாளர்களை சந்திக்க பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள கமல், போட்டியாளர்களை நேரடியாக சந்தித்து இந்த வாரம் எலிமினேட் ஆகியுள்ள பொன்னம்பலத்தின் பெயரை அறிவித்துள்ளார் என்ற தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. பிக் பாஸ் வரலாற்றிலேயே முதன் முறையாக போட்டியாளர்களை நேரில் சந்தித்து கமல் அவர்கள் எலிமினேஷனை அறிவித்துள்ளது இதுவே முதன் முறையாகும்.

பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தி, மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பட்டு வருகிறது. ஆனால், தமிழில் தான் முதன் முறையாக கமல் அவர்கள் போட்டியாளர்களை நேரில் சந்தித்து எலிமினேட் செய்யப்பட்டுள்ள நபரின் பெயரை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, கமல் அவர்கள் போட்டியர்களை நேரடியாக சந்தித்து எலிமினேஷனை அறிவித்த பின்னர் போட்டியாளர்களின் ரியாக்க்ஷன் என்னவாக இருந்திருக்கும் என்பதை இன்று பொறுத்திருந்து காணலாம்.