குடும்பத்துல ஒருத்தர் இறந்தப்போ கூட எப்படி நகை, புதுப்படவனு கொண்டாட முடியுது இவங்களால – தன் தங்கைகளை வறுத்தெடுத்த வனிதா.

0
29949
vanitha
- Advertisement -

தன்னுடைய குடும்பத்தினர் தன்னிடம் பேசாததே நல்லது என்று வனிதா உருக்கமான பதிவை போட்டுள்ளார்.சமூக வலைதளத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய பிரபலமாக இருந்து வருபவர் நடிகை வனிதா. வனிதா தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். மேலும், பிரபல நடிகரான அருண் விஜய்யின் சகோதரி என்பதும் அறிந்த விஷயம் தான். இப்படி இருக்க வனிதா விஜய்குமார் அருண் விஜய்யின் சொந்த சகோதரி இல்லை என்பது பலரும் அறிந்திடாத ஒன்று.

-விளம்பரம்-

விஜயகுமார் கடந்த 1969 ஆம் ஆண்டு முத்துக்கன்னு என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 1976 யில் நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்டார். விஜயகுமாரின் முதல் மனைவியான முத்துக்கனுக்கு பிறந்தவர் தான் அருண் விஜய். மேலும், இவருடன் அனிதா , கவிதா என்ற இரண்டு சகோதரிகள் பிறந்தனர். மேலும், மஞ்சுளாவிற்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி. ஆனால், அருண் விஜய் அனைவரையும் உடன் பிறந்த சகோதரிகளாக தான் பாவித்து வந்தார்.

இதையும் பாருங்க : திருடன்கள் இல்லாத ஜாதி இருக்கா – சாட்டையடி வசனத்தோடு வெளியான ‘ஜெய் பீம்’ பட டீஸர்.

- Advertisement -

ஆனால், வனிதாவுடன் ஏற்பட்ட பிரச்சனையால் அவரை ஒட்டுமொத்த குடும்பத்தினரும் ஒதுக்கி வைத்துவிட்டனர். இந்த நிலையில் நேற்று ஆயுத பூஜையை முன்னிட்டு வனிதா, தன் இன்ஸ்டா பக்கத்தில் இரங்கல் செய்தி ஒன்றை போட்டிருந்தார். அதில், விஜயகுமாரின் சகோதரரின் மகளான இந்திராவின் கடைசி மகளான அனிதா என்ற 20 வயது பெண் சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 4 அம தேதி காலமாகி இருக்கிறார் காலமாகி இருக்கிறார்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் அனிதா தனக்கு எப்போதும் ஆதரவாக இருந்து வந்ததாகவும் அவர் அக்டோபர் நடுவில் தன்னுடன் வந்து இரண்டு மாதங்கள் தங்க திட்டமிட்டு இருந்ததாகவும் கூறி இருக்கிறார். மேலும் அவர் இறந்து 16 நாள் கழித்துத்தான் இந்த செய்தியை தனக்கு தெரியும் என்றும் அக்டோபர் 8ஆம் தேதி கூட அவருக்கு தான் மெசேஜ் செய்ததாகவும். ஆனால் அவர் 4ஆம் தேதியை இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டு தான் மிகவும் அதிர்ச்சி அடைந்து இருப்பதாகவும் கூறியுள்ளார்

-விளம்பரம்-

மேலும், இதனால் நான் என்னுடைய நவராத்திரியை கூட கொண்டாடவில்லை. என்னுடைய சகோதர சகோதரிகள் போல ஒரு குழந்தை இறந்த கொஞ்ச நாட்களிலேயே நகை புடவை எல்லாம் அணிந்து நவராத்திரி கொண்டாடுவது பிறந்தநாள் கொண்டாடுவதோ என்னால் முடியவில்லை. இது மிகவும் மனிதாபமற்ற செயல். இந்த போலியான குடும்பம் என்னுடன் இருக்கவில்லை என்று நினைக்கையில் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் என்று பதிவிட்டிருக்கிறார்.

Advertisement