கோர்ட் ஷூட், ஸ்டைலான ஹேர் ஸ்டைல் – புத்தாண்டில் வேற லெவல் Transformation-ல் நடிகை வையாபுரி.

0
2606
Vaiyapuri

சமீப காலமாகவே பல்வேறு நடிகர்கள் படு ஸ்டைலிஷான போட்டோ ஷூட்களை நடத்தி அசத்தி வருகின்றனர். அதிலும் சமீப காலமாக பிக் பாஸ் பிரபலங்களான சென்ட்ராயன், சரவணன், சாண்டி என்று பலரின் Transformation புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. இப்படி ஒரு நிலையில் நடிகரும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான வையாபுரியின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து பலரும் வியந்துபோயுள்ளார்கள். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் வையாபுரி. இவர் தேனி அருகிலுள்ள முத்துதேவன்பட்டி என்னும் ஊரை சேர்ந்தவர். இவருடைய உண்மையான பெயர் ராமகிருஷ்ணன்.

ஆனால், திரைப்படத்திற்காக வையாபுரி என்று பெயரை மாற்றிக்கொண்டார். இவர் முதன் முதலாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னமருது பெரியமருது, மால்குடி டேஸ் என்ற தொடர்களில் நடிக்க தொடங்கினார். அதற்கு பிறகு தான் இவர் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. இவர் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த செல்லகன்னு என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். அதற்குப் பிறகு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படத்தில் நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் – புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

- Advertisement -

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் 250 படங்களுக்கு மேல் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் வையாபுரி அவர்கள் பல மாதங்களுக்கு முன்னர், அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அளித்த பேட்டி அவர் கூறியிருப்பது, நான் நிறைய பெரிய நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கேன். அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் கூட நான் நடித்து உள்ளேன். ஆனால், தற்போது நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் நான் தேடிக் கொண்டு இருக்கிறேன்.

ஒரு கலைஞன் எப்போதுமே பிஸியாக இருக்க வேண்டும். ஃப்ரீயாக இருந்தால் மனதில் சஞ்சலம் ஏற்படும்.சினிமாவில் இவ்வளவு ஹீரோக்கள் இருக்கிறார்கள். ஆனால், எங்களை மாதிரி கலைஞர்களை கண்டு கொள்வது இல்லை. விஜய், அஜித்திடம் வாய்ப்பு கேட்டு நான் சென்ற போது இதோ அடுத்த படத்தில் பண்ணிடலாம் என்று சொல்வார்கள். ஆனால், அதன் பின்னர் நான் கேட்பது அவர்களிடம் போய் சேருகிறதா என்று தெரியவில்லை என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் படு மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் சில சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement