நாகர்ஜூனாவிடம் பார்த்து கத்துக்கோங்க கமல் – தெலுங்கு பிக் பாஸ் வீடியோவை பகிரும் பிக் பாஸ் ரசிகர்கள்.

0
144558

விரைய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியை இருந்து வருகிறது. தமிழை போலவே பிக்பாஸ் நிகழ்ச்சி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தமிழைப் போல தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியும் நான்காவது சீசன் எட்டி இருக்கிறது. நாகர்ஜுனா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதியே துவங்கிவிட்டது. ஆரம்பித்த ஒரு சில நாட்களிலேயே இந்த நிகழ்ச்சி மிகவும் சூடு பிடிக்கத் தொடங்கியது.

இதிலுள்ள போட்டியாளர்கள் அனைவருமே தனிப்பட்ட முறையில் யாரிடமும் பாசம் காட்டாமல் டாஸ்க் என்று வந்துவிட்டால் போட்டியாளர்களாக மட்டுமே பார்க்கின்றார்கள். அதேபோல டாஸ்க் என்று வந்துவிட்டால் நட்பு, பாசம் இதை பற்றி எல்லாம் பார்க்காமல் அடித்து வெளுத்து வருகிறார்கள். சொல்லப்போனால் இந்த சீசனில் தமிழ் பிக் பாஸ்ஸை விட தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி தான் மிகவும் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது என்று கூட சொல்லலாம்.

- Advertisement -

தெலுங்கு பிக் பாஸின் முதல் சீசனை ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்கியிருந்தார். அதன் பின்னர் நானி இரண்டாவது சீசனில் தொகுத்து வழங்கி இருந்தார். மூன்றாவது சீசனை நாகர்ஜுனா தொகுத்து வழங்கி இருந்த நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் நான்காவது சீஸனிலும் நாகார்ஜுனாவின் தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால், ,தமிழை விட தெலுங்கு பிக் பாஸ் தான் மிகவும் சுவாரசியமாக இருக்கிறது என்றும் அதிலும் நாகர்ஜுனா, கமலை போல அல்லாமல் போட்டியாளர்களை பாரபட்சம் பார்க்காமல் வறுத்தெடுத்து வருகிறார் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

பொதுவாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கமல் வருவதால் நிகழ்ச்சி கொஞ்சம் சுவாரசியமாக இருக்கும்.மேலும், அந்த வாரம் முழுவதும் நடைபெற்ற பிரச்சினைகளை கமல் அலசி ஆராய்வார். ஆனால், இந்த சீசனில் இதுவரை அப்படி எதுவுமே நடந்தது கிடையாது. அவ்வளவு ஏன் ரசிகர்களுக்கு அறிவுரை என்பதை கூறுவதற்கு பதிலாக டிப்ஸ் என்றுதான் கூறி வருகிறார். இந்த சீசன் கிட்டத்தட்ட பாதி சீசனையே முடிந்த நிலையில் இதுவரை ஒரு குறும்படம் கூட போடப்படவில்லை என்பது ரசிகர்களின் ஏமாற்றமாக இருந்து வருகிறது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் தெலுங்கு பிக் பாஸ் ப்ரோமோ ஒன்றை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அதில் அபிஜித் என்ற போட்டியாளரை நாகார்ஜூனா வறுத்தெடுத்துள்ளார். தப்பு செய்துவிட்டு மன்னிப்பு கேட்பது தான் உங்க வேலையா ? விதிகளை மதித்து டாஸ்க்க்கு உட்பட்டு விளையாடுங்கள் இல்லை என்றால் வெளியேறுங்கள் என்று பிக் பாஸ் கதவை துறந்துவிட்டார். இதனை குறிப்பிட்டு, கமல், நாகர்ஜுனாவிடம் இருந்து நிகழ்ச்சியை எப்படி தொகுத்து வழங்க வேண்டும் என்று கற்றுக்கொள்ளவேண்டும் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement