மருத்துவமனையில் அனுமதிப்பட்ட தமிழ் பிக் பாஸ் 3 நடிகை – இப்போ தான் பிக் பாஸ் ஜோடில கூட வந்தாங்க.

0
3330
fathima
- Advertisement -

தென்னிந்திய சினிமா துறையில் மிகப் பிரபலமான நடிகையாக இருந்தவர் பாத்திமா பாபு. இவர் நடிகை என்பதை விட பிரபலமான செய்தி வாசிப்பாளர் என்று சொல்லலாம். இவரை அதிகம் செய்தி வாசிப்பாளராக தான் மக்களுக்கு தெரியும். இவர் 1964 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார். இவர் தூதர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தான் தனது பயணத்தை தொடங்கினார். பின்னர் தமிழில் ஜெயா டிவியில் பல ஆண்டுகளாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார்.

-விளம்பரம்-

பின் தமிழில் 1996 ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘கல்கி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் தமிழ், மலையாளம் என்று பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தான் நடித்துள்ளார். அதன் பின்னர் ஏசியா நெட் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.

இதையும் பாருங்க : கனி வீட்டில் இத்தனை புத்தகங்களா? ஒரு மினி லைப்ரரியே இருக்கும் போலயே – இத படிச்சி தான் டைட்டலை அடிச்சாரோ ?

- Advertisement -

அதே போல பல சீரியல்களில் கூட நடித்து இருக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இவர் போட்டியாளராக பங்கேற்றார். ஆனால், இவர் ஒரு சில வாரங்களிலேயே இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

I wanted people to see and know the real me: Fathima Babu - Times of India

இந்த நிலையில், பாத்திமா பாபு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெறும் படியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இதனால் இவருக்கு என்ன ஆனது என்று இவரது ரசிகர்கள் பலர் ஷாக்காகினார்கள். இதுகுறித்து தனது யூடுயூப் பக்கத்தில் விளக்கமளித்துள்ள பாத்திமா பாபு, சிறுநீரக பிரச்னையால் அவதியடைந்து வந்த அவர் அறுவை சிகிச்சை செய்துக் கொண்டதாகவும் தற்போது தான் நலமுடன் இருப்பதாகவும், உடல்நலம் சார்ந்த சில டிப்ஸ்களையும் கூறியுள்ளார். 

-விளம்பரம்-
Advertisement