இப்படித்தான் உங்கள் மானத்தை காப்பாற்ற வேண்டுமா – கண்கலங்கி வீடியோ வெளியிட்ட பிக் பாஸ் நடிகை.

0
31691
shivani
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 12 வாரங்களை கடந்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா ஆகிய என்று 8 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் அனிதா சம்பத் வெளியேறி இருந்தார். , இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில வாரங்களில் தான் எஞ்சி இருக்கிறது. இதனால் தான் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் கூட டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. அதே போல இத்தனை வாரங்களை கடந்தாலும் பிக் பாஸ் வீட்டில் இதுவரை சுவாரசியமான டாஸ்ககும் கொடுக்கப்படவில்லை.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் Freeze Task துவங்கப்பட்டு இருக்கிறது. இதில் போட்டியாளர்களின் ஒவ்வொரு குடும்பத்தினரும் பிக் பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்துள்ளனர்.நேற்றைய நிகழ்ச்சியில் பாலாஜியை சந்திக்க அவரது சகோதரரும் சந்திக்க ஷிவானியை அவரது அம்மாவும் வந்திருந்தார்கள் இதில் உள்ளே வந்த ஷிவானியின் அம்மா சிவானி கண்டமேனிக்கு திட்டி தீர்த்து இருந்தார்.உள்ளே சென்ற அவர் எதுக்கு இங்கே வந்த, இங்க நீ என்ன செய்தாலும் வெளியில் தெரியாது என்று நினைக்கிறாயா? ஏன் டி எப்ப பாத்தாலும் அவன் பின்னாடியே சுத்தர, உனக்குன்னு ஒரு தனித்தன்மை கிடையாதா. எப்ப பாத்தாலும் அவன் என்ன சொல்றானோ அத தான் செய்வியா?

இதையும் பாருங்க : சித்ராவின் வீடியோக்களை அழித்து, என்னை அடித்து விரட்டினார் ஹேமந்த்- சித்துவின் உதவியாளர்.

- Advertisement -

இதுக்கு தான் உள்ள வந்திய ? இந்த 85 நாள்ல நீ என்ன பண்ணணுன்னு சொல்லு. இது பிக் பாஸ் நிகழ்ச்சி ஜோடியா ஆட இது ஒன்னும் ஜோடி நிகழ்ச்சி கிடையாது. உன்னால ஊர்ல சொந்தக்காரங்ககிட்ட எல்லாம் அசிங்கப்படுறோம். ஆரி, உனக்கு என்ன பேக்கேஜ் வச்சாரு, அவரு எத்தன தடவ சொன்னாரு தனியா விளையாடுன்னு. ஆனா, அவன் யார நாமினேட் பன்றானோ அவன தான் நீ நாமினேட் பண்ணற.உனக்குன்னு ஒரு புத்தி இல்ல என்று கண்ட மேனிக்கு ஷிவானியை திட்டத் தீர்த்த ஷிவானியின் தாயார், ஆரியிடம் நீங்க சூப்பரா விளையாடுறீங்க என்று கூறினார்.

இந்த எபிசோடுக்கு பின்னர் ஷிவானியின் அம்மாவிற்கு ஆதரவாக இருந்தாலும் ஒரு சிலர் ஷிவானியின் அம்மா செய்தது தவறு என்று கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான பாத்திமா பாபு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அந்தப்பொண்ணு அவ்வளவு கெஞ்சது விட்டு இருக்கலாமே. வீட்டிற்கு சென்ற பிறகு திட்டி இருக்கலாமே. ஏன் இப்படி நிகழ்ச்சியிலேயே திட்டிவிட்டார்கள். எனக்கு அவரை நினைத்து மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஒரு பொண்ணு இப்படி நடத்தக்கூடாது. இப்படித்தான் உங்கள் மானத்தை காப்பாற்ற வேண்டுமா இதுதப்பு ஷிவானி அம்மா இதை நான் எதிர்பார்க்கவில்லை. ஷிவானி மிகவும் பாவம் அவ்வளவுதான்என்னால் சொல்ல முடியும் என்று கண்ணீர் மல்க கூறியிருக்கிறார்

-விளம்பரம்-
Advertisement