சித்ராவின் வீடியோக்களை அழித்து, என்னை அடித்து விரட்டினார் ஹேமந்த்- சித்துவின் உதவியாளர்.

0
1541
chitra
- Advertisement -

பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் சித்ராவின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி படப்பிடிப்பை முடித்து விட்டு ஹோட்டலுக்கு சென்ற சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட போது அவருடன் அவரது கணவர் ஹேம்நாத் தான் தங்கி இருந்தார். ஹேம்நாத் அளித்த தகவலின் பெயரிலேயே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர். ஆனால், சம்பவத்தன்று என்ன நடந்தது என்பதை முன்னுக்கு பின்னாக ஹேம்நாத் கூறி வருவதாக தகவல்கள் வெளியானது.

-விளம்பரம்-

அதே போல சித்ராவின் உடலில் இருந்த ரத்த காயங்களை பார்த்து பலருக்கும் சந்தேகம் எழுந்தது. இதனால் ஹேம்நாத் தான் சித்ராவை கொலைசெய்து இருப்பார் என்றும் சர்ச்சை எழுந்தது. அதே போல சித்ராவின் தாயாரும், என் மகளை அவன் தான் அடித்தே கொன்று விட்டான் என்றும் கதறி இருந்தார். ஆனால், சித்ராவின் பிரேதபரிசோதனை முடிவின்படி சித்ராவின் மரணம் தற்கொலை தான் என்று உறுதி செய்யப்பட்டது. ஆனால். சித்ராவின் மரணத்திற்கு காரணம் அவரது தாயார் மற்றும் அவரது கணவர் கொடுத்த மன அழுத்தமே காரணம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் உள்ள அவ்ளோ பிரச்சன இருந்தாலும், அதையெல்லாம் மறந்து அனிதா தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்ற போட்டியாளர்.

- Advertisement -

சித்ராவின் மரணத்தை அடுத்து அவரது கணவர் ஹேம்னாத்திடம் நடைபெற்ற விசாரணையில் அவர் தற்கொலைக்கு தூண்டியதன் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதே போல சித்ரா விவாகரத்தில் பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. இப்படி ஒரு நிலையில் ஹேம்நாத் குறித்து சித்ராவுடன் பணிபுரிந்த முன்னாள் உதவியாளர் சலீம் என்பவர் சில திடுக்கிடும் தகல்களை வெளியிட்டுள்ளார்.  சித்ரா ஷூட்டிங், நிகழ்ச்சிகளுக்கு கூடவே செல்லும் சலீமின் வேலை அங்கு நடக்கும் எல்லோவற்றையும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுப்பது தான் .

chitra

ஹேம்நாத் குறித்து சலீம் கூறியுள்ளதாவது, ஹேம்நாத் எந்த வேலைக்கும் போக மாட்டார் பத்து மணிக்கு மேல தான் தினமும் எழுந்திருப்பார். மேலும், அவர் சித்ராவிற்கு போன் செய்து கொண்டே இருப்பார். தி நகரில் இருந்த போதே இருவருக்கும் பெரிய சண்டை வந்து இருக்கிறது. நான் சித்ராவுடன் சென்று வீடியோக்கள் எடுப்பதை முதலில் தவிர்த்தார். நான் சித்ராவை வீடியோ எடுத்து சம்பாதிக்கிறேன் என்று தவறாக புரிந்து கொண்டு ஒரு கட்டத்தில் என் செல்போனை பிடுங்கி அதில் இருந்த சித்ரா தொடர்பான வீடியோக்களை அழித்துவிட்டு என்னை அடித்து விரட்டினார். அதன் பின்னர் நான் சித்ராவிடம் இருந்து விலகி விட்டேன் என்று கூறியுள்ளார் சலீம்.

-விளம்பரம்-
Advertisement