இறுதி போட்டியை நெருங்கியுள்ள போட்டியாளர்கள் கடந்து வந்த பாதை.! விரிவான பிளாஷ் பேக்.!

0
843
bigg boss

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது இதுவரை பல்வேறு போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் இறுதிப்போட்டிக்கு லாஸ்லியா சாண்டி ஷெரின் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். இன்னும் ஒரு சில நாட்களில் பிக்பாஸ் பட்டத்தை வெல்லப் போவது யார் என்பது நமக்குத் தெரிந்துவிடும். அதற்கு முன்பாக தற்போது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள போட்டியாளர்கள் கடந்து வந்த சில பாதைகளை பற்றி நாம் கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிக்கெட்டு பினாலி டாஸில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முதல் போட்டியாளராக நேரடியாக தகுதி பெற்றவர் தான் முகென். பிக்பாஸ் ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத முகமாக அறிமுகமான இவர் மலேசியாவை சேர்ந்தவர். மலேசியாவில் இவர் பல்வேறு ஆல்பம் பாடல்களில் நடித்து மலேசிய ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரிட்சயமான நபராக திகழ்ந்து வந்தார். இருப்பினும் தமிழ் ரசிகர்களுக்கு இவர் யாரென்று தெரியாததால் பிக் பாஸில் இவரை எடைபோட கொஞ்சம் நாட்கள் ஆனது. ஆரம்பம் முதலே தனது பாடும் திறமையை வெளிப்படுத்தி வந்த முகென் ஆரம்பத்தில் சக போட்டியாளர்களிடம் அவ்வளவாக ஒட்டி பழகவில்லை. இருப்பினும் அபிராமி காதல் விஷயத்தில் இவர் சிக்கியதும் கொஞ்சம் ரசிகர்களால் கவனிக்கப்பட்டார். மேலும், இவர் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பதியப்பட்டதற்கு முக்கிய காரணம் இவரது கோபம்தான். அதிலும் அபிராமி விஷயத்தில் கட்டிலை உடைத்தது, நாற்காலியை தூக்கி அடிக்க சென்றது என்று பிக்பாஸில் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தார். ஆரம்பத்தில் இவரின் பங்களிப்பு பிக்பாஸ் வீட்டில் குறைவாக இருக்கிறது என்று கமல் கூறியதால், தனது முழு திறனையும் வெளிப்படுத்தத் தொடங்கினார். இருப்பினும் அவரது கோபத்தை கட்டுப்படுத்த பெரிதும் பாடுபட்டார். சேரன் விஷயத்தில் மீரா மிதுன் குற்றம்சாட்டிய போதும் மீரா மிதுனிடம் கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டார். பின்னர் நாட்கள் செல்ல செல்ல தனது கோபத்தை குறைத்து கொண்டு டாஸ்கில் கவனம் செலுத்தி ரசிகர்களின் மனதில் பதிந்து வந்தார். குறிப்பாக சக போட்டியாளர்களிடம் இவர் நடந்து கொண்ட விதமும் அபிராமி தன்னை காதலிக்கிறார் என்று தெரிந்தும் அவரிடம் நடந்து கொண்ட விதமும் ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது. மேலும், பிக் பாஸ் வீட்டில் யாருக்காவது அடிபட்டால் முதல் ஆளாக அவர்களுக்கு உதவி செய்ய ஓடி விடுவார். அதில் குறிப்பாக ஒரு டாஸ்கிங் போது தர்ஷனுக்கு காயம் ஏற்பட்டுவிட தனது டி-ஷர்ட்டை கிழித்து தர்ஷனுக்கு கட்டுப் போட்டு விட்டது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதேபோல இவர் கைவினைப் பொருட்கள் செய்வதிலும் வல்லவர். இதுவரை பல்வேறு சக போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து பல்வேறு கைவினைப் பொருட்களை செய்து கொடுத்திருக்கிறார். இப்படி பிக் பாஸ் வீட்டில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளார் முகென்.

- Advertisement -

முகெனுக்கு அடுத்தபடியாக இந்த சீசனில் இரண்டாவது இறுதிப் போட்டியாளராக தேர்வான சாண்டியை பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாகவே ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலத்தை கொண்டவராக இருந்தார் சாண்டி. பிக்பாஸ் ஆரம்பத்தின் முதலே தனது ஜாலியான குணத்தினால் மற்ற போட்டியாளரிடம் விரைவில் ராசியான சாண்டி. அதில் சாண்டிக்கு மிகவும் நெருக்கமானது கவின் தான். இந்த சீசன் ஆரம்பித்த நாள்முதல் கவினுக்கு இவர் பெரிதும் உறுதுணையாக இருந்தார். மேலும் இவரால் பிக்பாஸ் வீட்டில் வி ஆர் த பாய்ஸ் என்ற கேங்கும் துவங்கியது. மேலும், பிக் பாஸ் வீட்டில் பல்வேறு கானா பாடல்களை பாடி அசத்தியுள்ளார். இவரது கானா பாடல்களை கமல் அவர்களை பாராட்டியும் இருக்கிறார். குறிப்பாக ஒவ்வொரு போட்டியாளரும் செல்லும் முன்னரும் இவர் பாடும் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் விரும்பப்பட்டது. இதுவரை பெரிய சர்ச்சையில் சிக்க வில்லை என்றாலும் ஒருகட்டத்தில் இவருக்கும் மதுமிதாவிற்கும் சண்டை ஏற்பட்டது. அப்போது தனது ஜாலி தன்மையிலிருந்து கொஞ்சம் சீரியஸ் மோடிற்க்கு வந்தார் சாண்டி. இருப்பினும் மதுமிதா எவ்வளவு தரைகுறைவாக பேசியும் அடுத்த சில நிமிடங்களிலேயே அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டார் சாண்டி, அதுதான் அவரது சிறந்த குணமாக கூட கருதப்படுகிறது. யாரிடமும் அவ்வளவாக குரலை உயர்த்தி பேசுவதில்லை மிகவும் நெருக்கமாக பழகி வந்த கவின் லாஸ்லியாவிற்காக சாண்டியை பலமுறை காயப்படுத்திய போதும் தானாக சென்று அவரிடம் பேசி இருந்தார் சாண்டி இவர் நட்பிற்கு கொடுக்கும் மரியாதையை கமல் கூட பாராட்டி இருந்தார். இவரது இந்த குணங்கள் பிக் பாஸ் பட்டத்தை வெல்ல உதவும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

losliya

சாண்டியை தொடர்ந்து அடுத்தபடியாக கூற வேண்டுமென்றால் அது கண்டிப்பாக லாஸ்லியா தான். முகெனை போலஇவரும் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத ஒரு முகமாகத்தான் பிக்பாஸில் அடியெடுத்து வைத்தார். இவரது அழகான தோற்றம் காரணமாக இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த 24 மணி நேரத்திலேயே இவருக்கு சமூகவலைதளத்தில் ஆர்மிக்கால் கூட உருவானது. ஆரம்பத்தில் யாரிடமும் அவ்வளவாக பேசாத லாஸ்லியா ரசிகர்களை அவ்வளவாக கவரவில்லை ஆனால் நாட்கள் செல்ல செல்ல இவரது உண்மையான குணம் வெளியே வரத் தொடங்கியது. பிக்பாஸ் வீட்டில் இவர் சேரனை தனது தந்தையை போல பாவித்து நடந்து வந்தார். மேலும், சேரனுக்கு அடுத்தபடியாக கவினிடம் மிகவும் நெருக்கமாக பழகி வந்தார். இவர் இதுவரை பெரிய சர்ச்சையில் சிக்க வில்லை என்றாலும் இவருக்கு சாக்க்ஷிக்கும் கவின் விஷயத்தில் கொஞ்சம் முட்டிக்கொண்டது கொண்டது ஆனால் இவருக்கு உறுதுணையாக கவின் எப்போதும் இருந்துவந்தார். அதேபோல கவின் விஷயத்தில் யாராவது குறை சொன்னால் உடனே பொங்கி விழுந்து விடுவார் அந்த வகையில் மதுமிதா கவின் குறித்து பேசியபோது அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் லாஸ்லியா. அப்போதுதான் லாஸ்லியாவின் மற்றுமொரு முகத்தை ரசிகர்களும் கண்டனர் .மேலும், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெரும்பாலான போட்டியாளர்கள் இவரை பட்டாம்பூச்சி போல் பாவித்து வந்தனர். மேலும் , வி ஆர் த பாய்ஸ் கேங்கில் இருந்த ஒரே பெண் போட்டியாளர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கவின் மற்றும் லாஸ்லியா விஷயத்தில் பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை முன்வைத்து வந்தாலும் அதனை பெரிதாக பொருட்படுத்தாமல் எப்போதும் கவினை விட்டுக்கொடுக்காமல் இருந்த வந்தார் மேலும், இவரது பெற்றோர்கள் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தபோது கவின் விஷயத்தில் இவரது தந்தை இவரை கடுமையாக திட்டித் தீர்த்தார். ஒரு கட்டத்தில் தன்னால் விளையாட்டில் கவனம் செலுத்த முடியவில்லை என்று இருந்து வெளியேறிய பல முறை அலுத்து புலம்பினார். இத்தனை தடைகளையும் தாண்டி தற்போது லாஸ்லியா இறுதி போட்டிக்கு நுழைந்தது பாராட்டுக்குரிய விஷயம் தான்.

-விளம்பரம்-
sandy

இந்த சீசனின் கடைசி இறுதி போட்டியாளராக இருப்பது ஷெரின் தான் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமான முகமாக இருந்துவரும் இவர் ஆரம்பத்தில் சாக்ஷி மற்றும் அபிராமி உடன் தான் மிகவும் நெருக்கமாக பழகி வந்தார். சொல்லப்போனால் பிக்பாஸ் வீட்டில் மிகப்பெரிய சண்டையை முதலில் ஆரம்பித்தது ஷெரின் தான். தமிழ் கலாச்சாரம் விவகாரத்தில் மதுமிதா பேசிய கருதினால் மிகவும் கடுப்பான ஷெரின் மதுமிதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதேபோல மதுமிதா தனது கையை கையை அறுத்துக்கொண்டு கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதற்கு முக்கிய காரணமே ஷெரின் தான் என்றும் ஒரு மிகப்பெரிய சர்ச்சை கூட இவர் மேல் பாய்ந்தது. ர் மேலும், இவர் தர்ஷனுடன் நெருக்கமாகவும் பழகி வந்தார். இதனால் வனிதாவுக்கும் இவருக்கும் பெரும் வாக்குவாதமும் ஏற்பட்டு இருந்தது. ஆரம்பத்தில் பெரிதாக கேமராவின் கண்களில் பெரிதாக பதியாத ஷெரின், பின்னர் நாட்கள் செல்ல செல்ல ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். ரசிகர்கள் மட்டுமல்லாது பிக்பாஸ் வீட்டில் இருந்த சக போட்டியாளர்களும்இவரை தான் பிக்பாஸ் வீட்டின் தேவதையாக குறிப்பிட்டு வந்தனர். அனைவரிடமும் அன்புடன் பழகி வரும் ஷெரின் டாஸ்க் என்று வந்து விட்டால் மிகவும் ஒரு கடினமான போட்டியாளராகவே இருந்துவந்தார். இறுதி வாரத்தில் நாமினேஷன் இருந்தபோது வெளியேறி விடுவார் என்று மக்கள் கருதி வந்தனர்,. ஆனால், தர்ஷன் வெளியேறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு முக்கிய காரணமாக ரசிகர்கள் கூறி வந்தது என்னவெனில் தர்ஷனுக்கு விழவேண்டிய வாக்குகள் சிம்பதி காரணமாக ஷெரீனுக்கு விழுந்ததால் தான் தர்ஷன் வெளியேற்றப்பட்டார் என்பதுதான். இப்படி பல்வேறு தடைகளை கடந்து தற்போது பிக் பாஸ்ஸின் இறுதி போட்டியாளர்களில் ஒருவராகதிகழ்ந்து வருகிறார்.ஷெரின் .

Sherin

இப்படி ஒவ்வொரு போட்டியாளரும் நிறைகளும் குறைகளும் இருக்கும் நிலையில் இந்த சீசனில் பட்டத்தை வெல்லப்போவது யார் என்பதற்கான வாக்குப்பதிவு இந்தவாரம் படு மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி முகெனுக்கு தான் அதிகப்படியான வாக்குகள் விழுந்து வருகிறது. முகெனுக்கு அதிக வாக்குகள் விழுவதற்கு தர்ஷனும் ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் தர்ஷன் பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை முகெனுக்கு தனது ஆதரவை தெரிவித்து வந்தார். அதேபோல பிக் பாஸ் வீட்டில் இருந்து தர்ஷன் வெளியேறிய போது நான் ஜெயிக்கவில்லை என்றாலும் நீ ஜெயிக்க வேண்டும். அப்படி செய்தால் அது நான் ஜெயித்ததற்கு சமம் என்று கூறிவிட்டு சென்றார் இதனால் தர்ஷனின் ஆதரவாளர்கள் தற்போது தங்களது ஆதரவைத் முகெனுக்கு தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. இதேபோல லாஸ்லியாவிற்கும் முகெனுக்கு இணையான ஆதரவு இருந்து வருகிறது. முகெனுக்கு எப்படி தர்ஷன் ரசிகர்கள் ஆதரவளித்து வருகின்றன. அதேபோல கவின் ரசிகர்கள் பலரும் தற்போதுலாஸ்லியாவிற்கு ஆதரவை அளித்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது. இதனால் கண்டிப்பாக லாஸ்லியா முதல் மூன்று இடத்தில் ஏதாவது ஒரு இடத்தை பிடித்து விடுவார் என்று நம்பப்படுகிறது. சாண்டியை எடுத்துக்கொண்டால் இவருக்கும் கவின் ரசிகர்களின் ஆதரவு இருந்துவருகிறது. அதே போல இவருக்கும் தனிப்பட்ட முறையில் பல்வேறு ஆரமிக்கல் கூட இருந்து வருகிறது. இறுதியாக ஷெரின் பற்றி சொல்ல வேண்டும் என்றால் இதுவரைஷெரின் பலமுறைநாமினேஷனில் இடம் பெற்று இருக்கிறார். ஆனால், ஏதோ ஒரு காரணத்திற்காக ரசிகர்கள் அவரை காப்பாற்றியுள்ளனர். மேலும் இவருக்கும் தர்ஷனின் ஆதரவு இருந்து வருகிறது. இருப்பினும் மற்ற மூன்று போட்டியாளர்களை ஒப்பிடும்போது ஷெரீனுக்கு கொஞ்சம் ஆதரவு குறைவாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .எனவே, இந்த சீசனின் முதல் மூன்று இடத்தை முகென் லாஸ்லியா, சாண்டி, ஆகியோர் பிடிப்பார்கள் என்று நம்பப்படுகிறது. தற்போது சென்று கொண்டிருக்கும் ஓட்டிங் நிலவரப்படி முகெனுக்கு தான் அதிக வாக்குகள் பதிவாகி முதலிடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரைத் தொடர்ந்து லாஸ்லியா இரண்டாவது இடத்திலும் சாண்டி மூன்றாவது இடத்திலும் கடைசி இடத்தில் சேரினும் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் இன்னும் ஐந்து நாட்களில் இந்த பிக் பாஸ் சீசன் 3 பட்டத்தை வெல்ல போவது யார் என்பது நமக்கு தெரிந்துவிடும்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement