அட,சம்யுக்தா கூட இவங்களும் வந்திருக்காங்க – ப்ரோமோல இவர் நீங்க நோட் பன்னீங்களா ?

0
1392
samyuktha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இன்னும் ஒரு சில நாட்களில் நிறைவடைய இருக்கிறது. இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா என்று 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா,ஆஜீத் ஆகிய என்று 11 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஷிவானி வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-

இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில நாட்கள் தான் எஞ்சி இருக்கிறது.தற்போது பாலாஜி ஆரி ரியோ சோம் சேகர் கேப்ரில்லா ரம்யா பாண்டியன் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி ஆகியுள்ள நிலையில் யார் டைட்டிலை வெல்வார் என்பதற்கான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. முதல் சீசனில் ஆரவ், இரண்டாம் சீசனில் ரித்விகா, மூன்றாம் சீசனில் முகன் என்று ஒரு ஆண், ஒரு பெண் மீண்டும் ஒரு ஆண் என்று பிக் பாஸ் டைலை வென்ற நிலையில் தற்போது இந்த சீசனில் ரம்யா, கேப்ரில்லா என்று இரண்டு பெண் போட்டியாளர்கள் இறுதி போட்டியில் இருக்கின்றனர்.

இதையும் பாருங்க : என்ன மட்டும் கூப்படல – வருத்தத்தில் பிக் பாஸ் 4 போட்டியாளர் போட்ட பதிவு.

- Advertisement -

ஆனால், இவர்கள் இருவரும் டைட்டிலை வெல்ல வாய்ப்பில்லை என்பதால் இம்முறையும் ஒரு ஆண் தான் வெற்றிபெற இருக்கிறார். மேலும், இந்த சீசனில் யார் வெற்றிபெறுவார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால், இந்த சீசனில் ஆரி தான் டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டனர். எனவே, இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடிக்கப்போவது யார் என்பது தான் போட்டியே.

இறுதி வாரம் என்பதால் பிக் பாஸ் வீட்டில் நிச்சயம் எதாவது ஜாலியான டாஸ்க் மற்றும் கொண்டாட்டங்கள் மட்டும் தான் இருக்கும். மேலும், இந்த வாரம் ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்கள் ரீ-என்ட்ரி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று ரேகா, அர்ச்சனா, நிஷா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் உள்ளே சென்ற நிலையில் தற்போது சம்யுக்தா உள்ளே சென்றுள்ளார். அதே போல சுச்சத்ராவும் வந்திருக்கிறார் என்பதை பலரும் நோட் செய்ய வாய்பில்லை.

-விளம்பரம்-
Advertisement