என்ன மட்டும் கூப்படல – வருத்தத்தில் பிக் பாஸ் 4 போட்டியாளர் போட்ட பதிவு.

0
33901
BB
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கட்டத்தை நெருங்கியுள்ளது. ஆரி, பாலாஜி, ரியோ, சோம், கேப்ரில்லா, ரம்யா ஆகியோர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் தற்போது ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற வண்ணம் இருக்கின்றனர். அந்த வகையில் நேற்று நிஷா, அர்ச்சனா, ஜித்தன் ரமேஷ், ரேகா ஆகியோர் உள்ளே சென்று இருந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட சுரேஷ் சக்ரவர்த்திக்கு அழைப்பு வரவில்லை. அழைக்காத இடத்திற்கு நான் எப்படி வரமுடியும். ஒருவேளை நான் தகுதியற்ற போட்டியாளரோ என்னவோ என்றும் வருத்தத்தோடு பதிவிட்டுள்ளார். பிக் பாஸின் இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத பல பல புதுமுகங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.

-விளம்பரம்-

அந்த வகையில் சுரேஷ் சக்கரவர்த்தியும் ஒரு சிலருக்கு தெரிந்த முகமாக இருந்தாலும் பலருக்கு இவரைப்பற்றி தெரியாமல்தான் இருந்தது. ஆரம்பத்தில் இவரை அனைவருமே ஒரு டெரரான பீஸ் என்றுதான் நினைத்தார்கள். அதேபோல இவர் இந்த சீசன் வனிதா என்றும் பலரும் விமர்சித்து வந்தார்கள். ஆனால், போகப்போக இவர் செய்யும் சேட்டைகளை பார்த்து இவருக்கு என்று ஒரு தனி ஆர்மியே அமைந்துவிட்டது. என்னதான் ஒரு சில நேரத்தில் மற்ற போட்டியாளர்களை வேண்டுமென்றே வம்பு இழுந்தாலும் டாஸ்க் என்று வந்துவிட்டால் சுரேஷ் மற்ற போட்டியாளர்களை விட மிகவும் சிறப்பாக செயல்பட்டுவந்தார் . அதேபோல தான் செய்யும் தவறுகளை மிகவும் நேர்மையாக ஒப்புக் கொள்கிறார் இதனாலேயே இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகரித்துவந்தது .

- Advertisement -

சுரேஷும் தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் தான். இவர் விசு, எஸ் பி பி என்று பல்வேறு ஜாம்பவான்களுடன் நடித்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு சில நாட்கள் முன்பாக சுரேஷ் சக்ரவர்த்தி வெறும் சாதத்தில் தண்ணீரை ஊற்றி சாப்பிட்டு வந்தால் மற்றவர்கள் எவ்வளவு சமாதானம் செய்தும் அவர் இறுதிவரை நிஷா சமைத்த உணவை மட்டும் தான் உண்டுவந்தார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் பதில் அளித்த சுரேஷ் சக்ரவத்தி நீதிமன்ற டாஸ்க்கில் தனக்கு எதிராக கை தூக்கிய அழைத்து நபர்களின் சமையலை இனி சாப்பிடக் கூடாது என்று முடிவு எடுத்தேன் என்றுகூறி இருந்தார்.

அர்ச்சனா குறித்து பேசுகையில், அந்த அம்மாவிற்கு அனைவருக்கும் தான் தான் படியளப்பது என்று நினைப்பு. அனைவருக்கும் சோறு போட்டால் தன்னை அனைவரும் நல்லவர் என்று நினைத்துக்கொள்வார்கள் என்று நினைத்தது. அதனால் தான் கிட்சன் டீமில் இருந்து அது வரவே இல்லை. நான் என்னவோ ஆஸ்திரேலியாவில் ரோட்டில் பிச்சை எடுத்து கொண்டிருந்த இது மாதிரி இது வந்து எனக்கு சோறு வைக்கிற மாதிரி காட்டும். அதோட ஸ்ட்ராங் பாய்ண்ட் அது தான் அதுனால் தான் அதில் கை வைத்தேன் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement