இன்னும் ஒரு நாளில் நிறைவடைய போகும் ஓட்டிங்.! இப்போ முதல் இடத்தில் இருப்பது யார் தெரியுமா ?

0
5931
Bigg-Boss
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருந்த இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் இருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்டதால் இந்த சீசனில் லாஸ்லியா, சாண்டி,முகென் ,ஷெரின் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இன்னும் 7 நாட்களில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிய வந்துவிடும்.

-விளம்பரம்-

- Advertisement -

தர்ஷன் வெளியேறியதால் தற்போது ஷெரின், சாண்டி, முகென், லாஸ்யா ஆகியோர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். அதேபோல இந்த சீசனில் தான் இறுதிப்போட்டிக்கு இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் தகுதியாகி உள்ளார்கள். முதல் சீசனில் ஆண்(ஆரவ்) டைட்டில் வின்னர் ஆகியிருந்த நிலையில் இரண்டாவது சீசனில் பெண்(ரித்விகா) டைட்டில் வின்னர் ஆக வந்திருந்தார். எனவே, இந்த சீசனில் வெற்றி பெறப் போவது ஆணா இல்லை பெண்ணா என்ற மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இதையும் பாருங்க : பிக் பாஸிற்கு பின் தர்ஷன் குடும்பத்துடன் பார்த்த முதல் படம்.! வைரலாகும் புகைப்படம்.!

இந்த நிலையில் பிக் பாஸ் பட்டத்திற்காக நடைபெற்று வரும் முகென் தான் முதல் இடத்தில் இருந்து வருவதாக நம்பகரமான வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே போல தற்போது பல்வேறு இணையதளங்களில் நடத்தப்பட்டு வரும் ஓட்டிங்கில் முகெனுக்கு தான் அதிக வாக்குகள் விழுந்து வருகிறது. அவரை தொடர்ந்து லாஸ்லியாவும் மூன்றாவது இடத்தில் சாண்டியும், இறுதி இடத்தில் ஷெரினும் இருந்து வருகிறார்கள். எனவே, முதல் நாளிலேயே முகென் முன்னணியில் இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

நான்காம் நாள் வாக்குகளின் நிலவரப்படி முகெனுக்கு தான் அதிகப்படியான வாக்குகள் விழுந்து வருகிறது. முகெனுக்கு அதிக வாக்குகள் விழுவதற்கு தர்ஷனும் ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் தர்ஷன் பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை முகெனுக்கு தனது ஆதரவை தெரிவித்து வந்தார். அதேபோல பிக் பாஸ் வீட்டில் இருந்து தர்ஷன் வெளியேறிய போது நான் ஜெயிக்கவில்லை என்றாலும் நீ ஜெயிக்க வேண்டும். அப்படி செய்தால் அது நான் ஜெயித்ததற்கு சமம் என்று கூறிவிட்டு சென்றார் இதனால் தர்ஷனின் ஆதரவாளர்கள் தற்போது தங்களது ஆதரவைத் முகெனுக்கு தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.

எனவே, தற்போதும் முகெனுக்கு தான் ஆதரவு அதிகம் இருந்து வருகிறது . பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் முகெனுக்கு பெரிய ஆதரவு ஒன்றும் ஏற்படவில்லை ஆனால், வாரங்கள் செல்ல செல்ல முகேனின் நல்ல குணத்தினால் முகெனுக்கு ரசிகர்களின் ஆதரவு கூடி வந்தது. ஒருவேளை முகென் மற்றும் வெற்றி பெற்றுவிட்டால் அது பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரலாறாக அமையும். அது என்னவெனில் முகென் தான் இந்த சீசனில் டிக்கெட் டு பினாலேவை வென்று இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார். ஆனால், கடந்த முதல் சீசனில் சினேகன் மற்றும் இரண்டாவது சீசனில் ஜனனியும் டிக்கெட் டு பினாலேவை என்றாறனர். ஆனால், இவர்கள் இருவருமே பிக் பாஸ் பட்டத்தை வெல்லவில்லை. எனவே, இந்த சீசனில் இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்ற முகெனாவது பட்டத்தை வெல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதேபோல லாஸ்லியாவிற்கும் முகெனுக்கு இணையான ஆதரவு இருந்து வருகிறது. முகெனுக்கு எப்படி தர்ஷன் ரசிகர்கள் ஆதரவளித்து வருகின்றன. அதேபோல கவின் ரசிகர்கள் பலரும் தற்போதுலாஸ்லியாவிற்கு ஆதரவை அளித்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது. எனவே, இந்த சீசனில் பிக் பாஸ் பட்டத்தை முகென் அல்லது லாஸ்லியா தான் வெல்வார்கள் என்று ஆணித்தனமாக நம்பப்படுகிறது. அதிலும் முகேனுக்கு தான் பட்டத்தை வெல்ல அதிக வாய்ப்பு இருந்து வருவதாக சமூக வலைதளத்தில் ஒரு பேச்சும் நிலவி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement