பிக் பாஸிற்கு பின் தர்ஷன் குடும்பத்துடன் பார்த்த முதல் படம்.! வைரலாகும் புகைப்படம்.!

0
2787
tharshan
- Advertisement -

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் தர்ஷன். தமிழகத்தில் அறிமுகம் இல்லாத புதியமுகம். தர்சன் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். பிரபல சாஃப்ட் வேர் (ஐடி) நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து இருந்தவர். அவருக்கு சினிமா மீது கொண்ட ஆர்வத்தினால் மாடலிங் செய்ய ஆரம்பித்தார். அது மட்டுமில்லாமல் இலங்கையிலேயே மாடலாக இருந்தார். மேலும் பல மாடலிங் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றுள்ளார்.

-விளம்பரம்-
tharshan

தர்சன் வாழ்க்கையில் பல துன்பங்களுக்கு பிறகு தற்போது தான் முன்னணிக்கு வந்தவர். ஆனால்,சினிமாவிற்கு எந்த ஒரு அறிமுகம் இல்லாதவர். ஏழ்மையான சாதாரண குடும்பத்தில் இருந்து சினிமாத்துறையில் ஹீரோவாக ஆகும் ஆசையில் புறப்பட்டவர். தற்போது பிக்பாஸ் வாய்ப்பு மூலம் தமிழக மக்கள் பலரின் மனதில் இடம் பிடித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல நடிகர்கள், இசையமைப்பாளர்கள் என அனைவரையும் சந்தித்து வாய்ப்பும் கேட்டுள்ளார். இதுவரை குறைந்தபட்சம் நூறு இடங்களிலாவது நடிப்புக்கான தேர்வில் கலந்து கொண்டுள்ளார்.

இதையும் பாருங்க : தல 60 படத்திற்காக 6 மணி நேரம் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் அஜித்.! வைரலாகும் புகைப்படம்.!

- Advertisement -

ஆனால் எதிலுமே சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் அதிக இடம் பிடித்துள்ளார்.தர்ஷன் தான் இறுதி கட்ட போட்டியாளராக சென்று பிக் பாஸின் டைட்டில் வின்னர் ஆக கூடிய வாய்ப்புள்ளது என்று ஆரம்பத்திலிருந்தே மக்களாலும், பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் அனைவரும் பேசப்பட்டு வந்த விஷயம். ஆனால், என்ன காரணமோ? என்னவோ? தெரியவில்லை. மலையே புரட்டிப் போடும் அளவிற்கு கடந்த வாரம் எலிமினேட் இருந்தது. தர்ஷன் வெளியேறியதைத் தொடர்ந்து பல கேள்விகள், பல குமுறல்கள் சமூக வலைதளங்களில் எழுந்த வண்ணம் உள்ளன.

tharshan family

மேலும் தர்ஷன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு சினிமா தியேட்டருக்கு சென்று பார்த்த முதல் படம் “காப்பான்”. கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த படம் தான் காப்பான். இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா சைகல், பொமன் இரானி, சமுத்திரகனி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர் . இப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் மோகன்லால் அவர்கள் இந்தியாவின் பிரதமராக நடித்துள்ளார். படத்தின் தொடக்கத்தில் இருந்தே நாட்டின் பிரதமரை கொலை செய்யும் திட்டத்துடன் ஒரு கும்பல் இருந்துகொண்டு வருகிறது. இந்த நாச வேலைகளை தடுத்து பிரதமரை காப்பாத்த சூர்யா ரகசிய உளவாளியாக பணியாற்றுகிறார்.

-விளம்பரம்-

இந்த படம் முழுக்க அறிவியல் சம்பந்தப்பட்ட தொழில் நுட்பங்களையும், விவசாய நிலத்தை பாதுகாக்கும் வகையிலும் ,புது விஷயங்களை அறிந்து கொள்ளும் நோக்கிலும் எடுக்கப்பட்ட படமாகும். படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் குறிப்பாக ட்ரெயின் ஸ்டன்ட் செம மாஸாக இருந்தது. ஒரு நாட்டின் பிரதமர் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்களோ! அந்த அளவிற்கு மோகன்லால் இருந்துள்ளார். நாட்டைக் காப்பதற்காக சூர்யா எடுத்த அவதாரம் தான் காப்பான் படம்.சூர்யாவின் காப்பான் படத்தை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம், அந்தளவிற்கு சுவாரசியமான தகவல்கள் படத்தில் உள்ளன.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement