பிக் பாஸ் டைட்டிலை வெல்லப்போவது யார்.! முதல் நாளில் இவருக்கு தான் ஓட்டு அதிகம்.!

0
23297
Bigg-bOss

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. நேற்றைய நிகழ்ச்சியில் இருந்துதர்ஷன் வெளியேற்றப்பட்டதால் இந்த சீசனில் லாஸ்லியா, சாண்டி,முகென் ,ஷெரின் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இன்னும்7 நாட்களில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிய வந்துவிடும்.

- Advertisement -

நேற்றைய நிகழ்ச்சியில் தர்ஷன் வெளியேறி இருந்துதான் ரசிகர்களுக்கும் சக போட்டியாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக அமைந்து இருந்தது. கடந்த வாரம் ஷெரின் தான் வெளியேறுவார் என்று பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் தர்ஷன் வெளியேற்றப்பட்டது மிகப் பெரிய ஏமாற்றமாக கருதப்பட்டு வருகிறது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் விஜய் டிவியையும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இதையும் பாருங்க : மீண்டும் தர்ஷனுக்கு கடிதம் எழுதி முகெனிடம் கொடுத்த ஷெரின்.! என்ன எழுதியுள்ளார் பாருங்க.!

அதேபோல இந்த சீசனில் தான் இறுதிப்போட்டிக்கு இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் தகுதியாகி உள்ளார்கள். முதல் சீசனில் ஆண்(ஆரவ்) டைட்டில் வின்னர் ஆகியிருந்த நிலையில் இரண்டாவது சீசனில் பெண்(ரித்விகா) டைட்டில் வின்னர் ஆக வந்திருந்தார். எனவே, இந்த சீசனில் வெற்றி பெறப் போவது ஆணா இல்லை பெண்ணா என்ற மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

-விளம்பரம்-

தற்போது பல்வேறு இணையதளங்களில் நடத்தப்பட்டு வரும் ஓட்டிங்கில் முகெனுக்கு தான் அதிக வாக்குகள் விழுந்து வருகிறது. அவரை தொடர்ந்து லாஸ்லியாவும் மூன்றாவது இடத்தில் சாண்டியும், இறுதி இடத்தில் ஷெரினும் இருந்து வருகிறார்கள். எனவே, முதல் நாளிலேயே முகென் முன்னணியில் இருந்து வருகிறார்.

Advertisement