மீண்டும் தர்ஷனுக்கு கடிதம் எழுதி முகெனிடம் கொடுத்த ஷெரின்.! என்ன எழுதியுள்ளார் பாருங்க.!

0
7455
Sherin

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக இறுதி கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி.மேலும்,டைட்டில் வின்னர் யார் ?என்று பல எதிர்பார்ப்புகளுடன் மக்கள் ஆவலாக உள்ளார்கள்.அதிலும் , நேற்று நடந்த எலிமினேஷனில் தர்சன் அவர்கள் வெளியேற்றப்பட்டார்.மேலும், கமல்ஹாசன் அவர்கள் நிகழ்ச்சி தொடக்கத்தில் எதிர்பார்க்காத விஷயமும் நடக்கலாம் என்று அவர் கூறியது போலவே நடந்தது என்று ரசிகர்கள் கூறினார்கள்.இந்நிலையில் தர்ஷன் தான் இறுதி கட்ட போட்டியாளராக சென்று டைட்டில் வின்னர் ஆக கூடிய வாய்ப்புள்ளது என்று ஆரம்பத்திலிருந்தே மக்களாலும், பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்கள்அனைவரும் பேசப்பட்டு வந்த விஷயம். ஆனால் திடீரென்று தர்சன் எலிமினேட் செய்தது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

முடிவாக கமல்ஹாசன் அவர்கள் இது மக்கள் ஓட்டின் மூலம் வந்த முடிவு என்று சொல்லிவிட்டார். ஆனால், என்ன? நடந்தது என்று ஒன்றும் புரியாத அளவிற்கு மக்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த வாரம் பிக் பாஸ் குழு வைத்த டாஸ்க்கில் ஷெரின் இடம் உங்களுக்கு இந்த வீட்டில் உள்ள யாராவது பற்றி உங்களுக்கு மனதில் தோன்றியதை ஒரு கடிதம் மூலம் எழுதுங்கள் என்று கூறினார் . அந்த கடிதத்தை தர்சனுக்காக எழுதினார் ஷெரின் .ஆனால், அந்த கடிதத்தை பிக்பாஸ் தர்ஷன் இடம் கொடுங்கள் என்று சொல்லியதற்கு ஷெரின் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டு கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டார்.

இதையும் பாருங்க : தர்ஷனின் வெளியேற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாத தமிழ் சினிமா நடிகர் நடிகைகள்.! உருக்கமான பதிவுகள்.!

- Advertisement -

Read more at: தர்ஷனின் வெளியேற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாத தமிழ் சினிமா நடிகர் நடிகைகள்.! உருக்கமான பதிவுகள்.!

அதற்குப் பிறகு தர்சன் அவர்கள் அந்த குப்பைத் தொட்டியில் இருந்து கிழிந்த காகிதங்களை எல்லாம் எடுத்து ஓட்டுப்போட்டு என்ன எழுதினார் என்று படித்து பார்த்தார். மேலும் ஷெரின் மனதில் தர்சன் மீது காதல் உள்ளது என்பதை உறுதி செய்தார்கள் ரசிகர்கள். இந்த நிலையில் தர்ஷன் வெளியேறுவதை ஷெரின் விரும்பவில்லை. உண்மையிலேயே நான் தான் வெளியே போக வேண்டும் என்று கதறி கதறி அழுதார் ஷெரின். மேலும், தர்ஷன் வெளியே செல்லும் போது அவருடைய உடைகளை எடுத்து வைக்கும்போது தான் எழுதிய கடிதத்தை சூட்கேசில் வைத்து அனுப்பி வைத்துவிட்டார்.

-விளம்பரம்-

தர்ஷன் வெளியே வந்து கமல் சாரிடம் நின்று உள்ளே இருக்கும் போட்டியாளர்களிடம் பேசும்போது தர்ஷன் அவர்கள் கூறியது, உங்கள் கடிதத்திற்கான பதிலை நீங்கள் வெளியே வாங்கள் சொல்கிறேன் என்று கூறினார். அதற்கு மக்கள் அனைவரும் சிரித்தார்கள், அதற்கு நீங்கள் எதிர்பார்க்கும் பதில் இல்லை என்று மறுத்து விட்டார்.மேலும்,என்ன பதில் தர்சன் சொல்லப்போகிறார் என்று பல எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் உள்ளனர்.

Advertisement