பரபரப்பாக நடைபெற்று வரும் இரண்டாவது நாள் ஓட்டிங்.! முன்னிலையில் இருப்பது இவர் தானாம்.!

0
26758
Bigg-bOss
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருந்த இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் இருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்டதால் இந்த சீசனில் லாஸ்லியா, சாண்டி,முகென் ,ஷெரின் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இன்னும் 7 நாட்களில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிய வந்துவிடும்.

-விளம்பரம்-

பிக் பாஸ் வின்னர் தர்ஷன் என்று பலரும் நினைத்து வந்த நிலையில் அவரே வெளியேறி இருந்துதான் ரசிகர்களுக்கும் சக போட்டியாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக அமைந்து இருந்தது. கடந்த வாரம் நடைபெற்ற ஓட்டிங்கில் ஷெரின் தான் குறையான வாக்குகளை பெற்றிருந்தார் எனவும், எனவே, அவர் தான் வெளியேறுவார் என்று பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் தர்ஷன் வெளியேற்றப்பட்டது மிகப் பெரிய ஏமாற்றமாக கருதப்பட்டு வருகிறது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் விஜய் டிவியையும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இதையும் பாருங்க : பூவே உனக்காக படத்தில் விஜயுடன் நடித்த நடிகையா இது.! என்ன இப்படி ஆகிட்டார்.

- Advertisement -

தர்ஷன் வெளியேறியதால் தற்போது ஷெரின், சாண்டி, முகென், லாஸ்யா ஆகியோர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். அதேபோல இந்த சீசனில் தான் இறுதிப்போட்டிக்கு இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் தகுதியாகி உள்ளார்கள். முதல் சீசனில் ஆண்(ஆரவ்) டைட்டில் வின்னர் ஆகியிருந்த நிலையில் இரண்டாவது சீசனில் பெண்(ரித்விகா) டைட்டில் வின்னர் ஆக வந்திருந்தார். எனவே, இந்த சீசனில் வெற்றி பெறப் போவது ஆணா இல்லை பெண்ணா என்ற மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில் பிக் பாஸ் பட்டத்திற்காக நடைபெற்று வரும் முகென் தான் முதல் இடத்தில் இருந்து வருவதாக நம்பகரமான வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே போல தற்போது பல்வேறு இணையதளங்களில் நடத்தப்பட்டு வரும் ஓட்டிங்கில் முகெனுக்கு தான் அதிக வாக்குகள் விழுந்து வருகிறது. அவரை தொடர்ந்து லாஸ்லியாவும் மூன்றாவது இடத்தில் சாண்டியும், இறுதி இடத்தில் ஷெரினும் இருந்து வருகிறார்கள். எனவே, முதல் நாளிலேயே முகென் முன்னணியில் இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் முகெனுக்கு பெரிய ஆதரவு ஒன்றும் ஏற்படவில்லை ஆனால், வாரங்கள் செல்ல செல்ல முகேனின் நல்ல குணத்தினால் முகெனுக்கு ரசிகர்களின் ஆதரவு கூடி வந்தது. ஒருவேளை முகென் மற்றும் வெற்றி பெற்றுவிட்டால் அது பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரலாறாக அமையும். அது என்னவெனில் முகென் தான் இந்த சீசனில் டிக்கெட் டு பினாலேவை வென்று இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார். ஆனால், கடந்த முதல் சீசனில் சினேகன் மற்றும் இரண்டாவது சீசனில் ஜனனியும் டிக்கெட் டு பினாலேவை என்றாறனர். ஆனால், இவர்கள் இருவருமே பிக் பாஸ் பட்டத்தை வெல்லவில்லை. எனவே, இந்த சீசனில் இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்ற முகெனாவது பட்டத்தை வெல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.


Advertisement